பக்கம்:வைணவ உரைவளம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 95 ஏடுகளை; என்றும்-எப்போதும்; மாண்டுமுடிந்து; அவத்தம் போகாமல்-பாழாய்ப் போகாமல்: கணங்கள்-ஞானியர் கூட்டம், தொத்து-பூங்கோத்துகள்; கனல்-நெருப்பு: பெய்வித்தான்-புகுவித்தான்.) இதுவும் திருக்கடல் மல்லைமேல் எழுந்த திருமொழிப் பாசுரம். தலசயனத்துறைவாரைத் தாம் சேவிக்கப் பெற்றதுபோல் உலகிலுள்ளாரெல்லாரும் சேவிக்கப்பெற வேண்டும் என்ற ஆசையினால் :இங்குச் சேவிக்க வாருங்கள்' என்று மற்றும் பலரையும் அழைக்கின்றார். ஆழ்வார். வயிற்றுப் பிழைப்புக்காகப் பிறர்க்கு அடிமைப் பட்டுக் காலத்தைப் பாழாக்குவாரும், புறச் சமயத்தைச் சார்ந்தவர்கள் போன்றவர்களின் திரளிலே புகுந்து சொரூப நாசம் அடைவாருமாகப் பலருண்டாகையாலே அவர்களை யும் விடமாட்டாத காருண்யத்தினால் அவர்களையும் மங்களா சாசனத்திற்கு ஆளாக்கிக் கொள்ளப் பாரிக் கின்றார். கின்றவூர் கித்திலத்தை: இரண்டாந் திருமொழியில் (2. I.) ஆழ்வார் எவ்வுள் கிடந்தானைச் சேவித்த பின்பு திருவல்லிக்கேணிக்கு எழுந்தருள்வதற்கு முன்பு திரு நின்ற ஊரைச் சேர்ந்தார். அத் திருப்பதியில் எழுந்தருளியுள்ள பத்தராவிப் பெருமாள் (பக்தவத்சலர்) அப்பொழுது ஆழ்வாருக்கு முகம் கொடாமல் பிராட்டியோடு சரச சல்லாபம் செய்துகொண்டு பராமுகமாக இருந்தபடியால், ஆழ்வார் அத் திருப்பதியை விட்டு அப்பால் சென்று திருவல்லிக்கேணியையும் (2.3) திருநீர்மலையையும் (2.4 சேவித்து இப்போது தலசயனப் பெருமாளைச் சேவித்து நிற்கும்பொழுது திருநின்றவூர் எம்பெருமான் திருமகளால் துண்டப் பெற்று இவ் வாழ்வார் திருவாக்கினால் பாடல் பெற்றுச் சிறப்புறக் கருதிக் கடல் மல்லையில் வந்து சேவை சாதிக்க, இப்போது திருகின்றவூர் கித்திலத்தைக்.கண்டது கான் கடல் மல்லைத் தலசயனத்தே' என்று திருநின்றவூர்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/120&oldid=920722" இலிருந்து மீள்விக்கப்பட்டது