பக்கம்:வைணவ உரைவளம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$96 வைணவ உரைவளம் பக்தலத்சலப் பெருமாளையும் சேவிக்கப் பெற்றதாக அருளிச் செய்கின்றார் என்பது பெரியோர்களின் நிர்வாகம். காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்த, வரலாறு பெரிய திருமொழி 2. 4: 2 ல் (இந்நூல் பாசுரம் 30இல்), வந்துள்ளது. 34 உடம்புருவில் முன்றொன்றாய் மூர்த்தி வேறாய் உலகுய்ய நின்றானை, அன்று பேய்ச்சி விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து விளையாட வல்லானை வரைமீ கானில் தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையம் காக்கும் கடும்பரிமேல் கற்கியைநான் கண்டு கொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லை தலசய னத்தே." (உடம்பு உருவில்-சரீர சரீரி பாவனையிட்டுப் பார்க்குமளவில்; மூன்று ஒன்றாய்-மூன்று: தத்துவமும் ஒன்றாய்; அன்று-கண்ணனாகப் பிறந்த அக்காலத்தில்; வித்தகன் ஆச்சரிய பூதன்; வரை மீகானில்-மலையின் மீதுள்ள காடுகளில்; தடம்-தடாகம்; கருமுகில்காளமேகம்; தவநெறி-கிட்டுகைக்காக மேற் கொள்ளப்பெறும் உபாயம்; பெருநெறிசிறந்த உபாயம் (சித்தோபாயம்); வையம் உலகம்; கடுபரி - கடுநடையையுடைய குதிரை; கடி - வாசனை: பொழில் - சோலை.) 10. பெரி. திரு. 2. 5: 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/121&oldid=920723" இலிருந்து மீள்விக்கப்பட்டது