பக்கம்:வைணவ உரைவளம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வைணவ உரைவளம் என்கின்ற இந்தப் பொருள் முதலடியில் காட்டப் பெற்றுள்ளது. பிரமன், சிவன் முதலிய தெய்வங்களைத் தனிப்படவும் நிறுத்தினது ஏதுக் காகவென்னில்;'படைப்பு அழிப்பு முதலிய உலகச் செயல்கள் நடைபெறுவதற்காக என்பார் 'உலகுய்ய' என்கின்றார். "வரைமீகானில் தடம்பருகு கருமுகிலை இந்த இடத்தில் ஒரு சம்வாதம் உண்டு. இந்தச் சொற்றொடருக்கு கஞ்சீயர் பொருள் சொல்லும்பொழுது வேறு விதமாகச் சொல்லா நிற்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த பிள்ளையழகிய மணவாளப் பெருமாளரையர் இவ்விடத்திற்குப் பட்டர் அருளி, செய்யும் பொருள் இப்படியன்றே" என்று சொல்லி, பட்டர் அருளிச் செய்யும் சிறப்புப் பொருளை நினைப்பித் தாராம்; அதாவது-மலைமீதுள்ள காடுகளில் கண்ணன் கன்றுகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது, இளங் கன்றுகள் அங்குள்ள தடாகங்களில் நீர் அருந்தப் போகும் போது நீரில் முன்னே இறங்கிக் குடிக்க அஞ்சுமாம், அக் கன்றுகட்கு நீருண்ணும் விதத்தைப் பழகுவிப்பதற்காகக் கண்ணன் தன்முதுகில் கைககளைக் கட்டிக்கொண்டுகவிழ்ந்து நின்று தன்னிரமுது செய்து காட்டுவானாம். இங்குக் காட்டிய இச் சொடர் கண்ணனுடைய இச் செயலைக் குறிப்பிடுகின்றது என்பாராம் பட்டர். 35 ஏனத் தின் உருவாகி நிலமங்கை எழில்கொண்டான் வானத்தில் அவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/123&oldid=920725" இலிருந்து மீள்விக்கப்பட்டது