பக்கம்:வைணவ உரைவளம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 99 கானகத்தின் கடல்மல்லைத் தலசயனத் துறைகின்ற ஞானத்தின் ஒளியுருவை நினைவார்என் நாயகரே. ' (ஏனம்-பன்றி. உருஆகி-திருவவதரித்து; நில மங்கை-பூமிப் பிராட்டி, எழில்-அழகு; கொண்டான் - மீட்டுக் கொணர்ந்தவன்; வானத்தில்,அவர்.தேவர்கள்; ஏத்தி-துதித்து; வலங்கொள்ள-பிரதட்சிணம் செய்வதற்குப் பாங்காக; கானம்.காடு; ஞானத்தின் ஒளிஉரு -ஞான ஒளிபெருந் திருமேனி; நினைவார்சிந்திக்கும் பாகவதர்கள்; நாயகர்-தலைவர்) திருக்கடல் மல்லையில் ஞானப்பிரான் என்ற திருநாமத் துடன் திருக்கோயில் கொண்டிருக்கின்ற எம்பெருமானை மங்களாசாசனம் செய்த திருமொழியில் ஒரு பாசுரம். இதில் திருமங்கையாழ்வார், பூமியைப் பாயாகச் சுருட்டி சுருட்டி எடுத்துச் சென்ற இரணியாட்சனைக் கொன்று பூமியைக் கொணர்ந்து பழையபடி விரிப்பதற்காகவும், பூமிக்கு நேர்ந்த பிரளயாபத்தைப் போக்கிக் கொள்வதற் காகவும் வராக அவதாரம் செய்தருளினவனும், நித்திய சூரிகளும் இவ்விடத்தில் வந்து வழிபாடுகள் செய்யுமாறு திருக்கடல் மல்லையில் திருக்கோயில் கொண்டிருப்பவனு மான ஞானப்பிரானைத் தியானிக்கும் பாகவதர்களே எனக்குத் தலைவர்: அவர்கட்கே நான் அடிமைப் பட்டிருப்பவன்' என்கின்றார். குறிப்பு : வராகப் பெருமானுக்கு “ஞானப்பிரான்' என்று திருநாமம் வழங்குதல் வைணவ சம்பிரதாயம். அது தோன்றவே பாசுரத்தில் ஞானத்தின் ஒளிஉரு" எனக் குறிப்பிடப் பெற்றுள்ளது. நம்மாழ்வாரும், ஏனத் 11. பெரி.திரு. 2.613

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/124&oldid=920726" இலிருந்து மீள்விக்கப்பட்டது