பக்கம்:வைணவ உரைவளம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 வைணவ உரைவளம் துருவாய் இடந்தபிரான்...ஞானப்பிரான்'2 என்று அருளி யுள்ளது ஈண்டு நினைக்கத் தக்கது. திருமால் வராக அவதாரமாக வந்த காலத்தில் நெடுங்காலம் காட்டில் விளையாடிப் பொழுது போக்கினதாகப் புராண வரலாறும் உண்டு. இதனைத் திருவுள்ளங் கொண்டே, வானத் தெழுந்த மழைமுகில் போல், எங்கும் கானத்து மேய்ந்து களித்து விளையாடி ஏனத் துருவா யிடந்தஇம் மண்ணினை தானத்தே வைத்தான்." 1.வானம்-ஆகாயம்: முகில்-மேகம்; கானம்காடு; இடந்த-கோட்டால் குத்தி எடுத்த; மண் - பூமி, தானத்து - அதன் இருப் பிடத்தில் 1 என்று பெரியாழ்வாரும் அருளிச் செய்துள்ளமை ஈண்டு எண்ணி மகிழத்தக்கது. ஞானப்பிரானைப்பற்றிய வரலாறு : திருக்கடல் மல்லை யில் அரிசேகரன் என்ற ஓர் அரசன் நாள்தோறும் உச்சிக் காலத்தில் அண்மையிலுள்ள திரு இட எங்தை 4 என்ற திவ்வியதேசம் சென்று அங்கு எழுந்தருளியுள்ள ஆதி வராக மூர்த்தியைச் சேவித்துவிட்டு ஊருக்குவந்து திருவாராதனை முடித்தபிறகு உணவு கொள்வது வழக்கம். ஒரு நாள் வராக மூர்த்தி இவ்வரசனின் பக்தியை உலகத்தினருக்கு அறிவிக்கத் திருவுள்ளங் கொண்டார். தானே ஒரு கிழ அந்தணர் உருக்கொண்டு பூமிப் பிராட்டியாரை ஒரு பெண்ணாக அழைத்துக்கொண்டு திருக்கடல் மல்லைக்கு 12. திருவிருத்:59T 13. பெரியாழ்.திரு. 2. 10:9 14. பிராட்டியாரை இடப்பக்கத்தில் வைத்துக்கொண்டிருப்ப தால் 'திரு இட எங்தை' என்ற பெயரால் வழங்கி வருகின்றது இத் திவ்விய தேசம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/125&oldid=920727" இலிருந்து மீள்விக்கப்பட்டது