பக்கம்:வைணவ உரைவளம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 101 எழுந்தருளினார். அப்பொழுதுதான் அரசன் திருவிட வெந்தைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அந்தணர் அரசன் எதிர் சென்று பசிக்கு உணவு தருமாறு கேட்டார். அரசன் தான் திருவிடவெந்தை சென்று திரும்பி வந்த வுடன் அவருக்கு வேண்டுவன நல்குவதாகக் கூறினான். கிழவரோ அச் சமாதானத்தைக் கேட்பதாக இல்லை. ஆகவே, அரசன் அந்தக் கிழவரை வராக மூர்த்தியாகப் பாவித்து உபசரித்துத் திரு வாராதனை சமர்ப்பித்தான். உடனே வராக மூர்த்தி அரசனது பக்திக்கு மெச்சி பூமிப் பிராட்டியைத் தனது வலப்புறத்தில் வைத்துக் காட்சி தந்தருளி ஞானோபதேசமும் செய்தார். இந்த நிலையில் தான் திருக்கடல் மல்லையில் எழுந்தருளியுள்ளார்." இங்கு எம்பெருமான் தனது வலக் காலை ஆதிசேடன்மீது வைத்துக்கொண்டும் இ.த் துடையின் மீது பூமிப் பிராட்டி யைத் தாங்கிக் கொண்டும் உள்ளார். இதனால் இந்த எம்பெருமான் திருவல எந்தை என்ற திருநாமம் பெறு கின்றார். 36 கடிகமழு நெடுமறுகில் கடல்மல்லைத் தலசயனத்து அடிகளடி யேகினையும் அடியார்கள் தம்மடியான் வடிகொள்கெடு வேல்வலவன் கலிகன் றி யொலிவல்லார் முடிகொள்கெடு மன்னவர்தம் முதல்வர்முத லாவாரே." 15. இந்தத் திருக்கோயில் ஒரு குகையினுள் அமைந்துள்ளது. கலங்கரை விளக்கத்தைவிட்டு இறங்கிச் சற்று மேற்குப் பக்கபாகச் செல்லும்பொழுது இந்த வராக மூர்த்தியின் ஆலயம் தென்படு கின்றது. இங்குப் பூசை முதலியன நடைபெறுகின்றன. 16. பெரி. திரு. 2.6:10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/126&oldid=920728" இலிருந்து மீள்விக்கப்பட்டது