பக்கம்:வைணவ உரைவளம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வைணவ உரைவளம் (கடி-வாசனை: நெடுமறுகு-நீண்ட வீதி, தலச யனத்து அடிகள்-எம்பெருமான்; நினையும்தி யானிக்கின்ற; வடிகொள்-கூர்மை பொருந் திய; வேல்வலவன்-வேலைக் கொண்டு பொருவதில் வல்லவன்; ஒலிவல்லார்-ஒத வல்லவர்கள்) திருக்கூடல் மல்லையின்மீதுள்ள திருமொழியின் பல சுருதிப் பாசுரம். :பாகவதர்களின் திருவடிகளையே தியானிக்கும் இந்த ஆழ்வாரின் இத்திருமொழியை ஒத வல்லவர்கள் கீரீடமணிந்த அரசர்களுக்கும் தலைவராகப் பெறுவர்கள்' என்று பயனுரைக்கின்றார் ஆழ்வார். முடிகொள்கெடு...முதல் ஆவார் : பாகவத சேஷத்துவமே பரம புருஷார்த்தம் என்று பரம போக்கியமாக அருளிச் செய்து வந்த ஆழ்வார் பலன் சொல்லுமிடத்து அகங்காரத் திற்கு மூல காரணமும் பாகவத சேஷத்துவத்திற்கு இடை யூறாகவும் உள்ள இகலோக ஐசுவரியத்தைப் பலனாகச் சொல்லுவதேன்? என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்டாராம். அதற்கு அவர் ரஸோக்தியாக அருளிச் செய்த மறுமொழி; *திருமங்கையாழ்வார் திருவவதரித்த பின்பு தியாச்சிய மான ஐசுவரியமும், பரம புருஷார்த்தமாய் விட்டது காணும்; பணமுள்ள விடங்களில் சென்று கொள்ளை யடித்து பகவத் பாகவத கைங்கரியங்கள் பண்ணுவராகை யாலே ஹேயமான் (கீழான) ஐசுவரியமும் இவ்வாழ்வார் திருவுள்ளத்தால் கருத்தாய் விட்டது' என்பது. 3ア 'திவளும்வெண் மதிபோல்' (அவதாரிகை) இது தாய்ப்பாசுரமாக நடப்பது. எம்பெருமானை அநுபவித்தல் பலவகைப் பட்டிருக்கும். அவனுடைய திருநாமங்களைச் சொல்லி அநுபவித்தல், திருக்கல்யாண குணங்களைச் 17. பெரி. திரு. 2.7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/127&oldid=920729" இலிருந்து மீள்விக்கப்பட்டது