பக்கம்:வைணவ உரைவளம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 105 என்ன? உடல் நலத்திற்குக் காரணமான வேப்பிலை யுருண்டையை உட்கொள்ள வேண்டியவர்கட்கு வெல் லத்தைக் கலந்து உண்பிப்பது போலவும், கொயினா மாத்திரைகட்குச் சருக்கரைப் பாகு பூசி இனிப்புச் சுவையை உண்டாக்கித் தின்பிப்பது போலவும், சிற்றின்பம் கூறும் வகையால் பேரின்பத்தை நிலை நாட்டுகின்றனர் என்று பெரியோர்கள் பணிப்பர். இது கடையாய காமத் தினையுடையவர்கட்குக் காட்டப்பெறும் உத்தி முறையாக இறையனார் களவியலிலும் கூறப்பெற்றுள்ளமை' ஈண்டு ஒப்பு நோக்கி உணர்தல் தகும். ஆழ்வார்களின் முறுகிய பக்தி நிலையை உணர்த்துவதற்கேற்ற ஓர் இலக்கிய மரபே இஃது என்று கொள்ளினும் இழுக்கில்லை என்க. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் அருளிச் செயல் களில் நாயகி நிலையில் பேசும் பாசுரங்கள் உள்ளன. திருவாய் மொழியில் இத்தகைய பதிகங்கள் 27 உள்ளன. இவற்றுள் மகள் பாவனையில் பேசியவை 17 பதிகங்கள்: தாய் பாவனையில் பேசியவை 7 பதிகங்கள்; தோழி பாவனையில் பேசியவை 3 பதிகங்கள். இங்ங்ணமே, பெரிய திருமொழியில் அகப்பொருள் நுவலும் பதிகங்கள் 23 உள்ளன; திருநெடுந்தாண்டகத்தில் 2 பதிகங்கள்; மடல் 2, ஆக மொத்தம் 27 திருமொழிகள் ஆகின்றன. இவற்றுள் தாய் பாவனையில் உள்ளவை 10; மகள் பாவனையில் உள்ளவை 17; தோழி பாவனையில் ஒன்று கூட இல்லை. 38 திவளும்வெண் மதிபோல் திருமுகத் தரிவை செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும்நின் ஆகத் திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசைவி டாளால் 18. இறையனார் களவியல்-நூற்பா 1-இன் உரை காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/130&oldid=920733" இலிருந்து மீள்விக்கப்பட்டது