பக்கம்:வைணவ உரைவளம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழ: 1 09 என்று சிலப்பதிகாரம் கூறும், இக் கொல்லிப்பவை கொல்லி மலையிலுள்ளது என்பதும், தெய்வத்தால் செய்யப்பட்டது என்பதும், அழகில் மிக்கதென்பதும், காற்றினாலும் மழை யினாலும் மற்றெவ்வகை ஊறுகளாலும் தன் அழகிய நல் வடிவம் கெடாதென்பதும் கற்றிணையில் காணத்தகும். இப்பாவையின் அழகைத் தலைவியின் நலத்திற்கு உவமை கூறுதல் அகநானூறு, புறநானூறு முதலிய நூல்களிலும் சிறப்பாக உண்டு. சீவகசிந்தாமணி, குறுந்தொகை என்ற நூல்களிலும் இப்பாவையைப்பற்றிய குறிப்புகளைக் காணலாம். ஆகவே, தமிழ்க் கவிஞர்கள் கொல்லிப் பாவையை ஒப்புயர்வற்ற அழகிற் சிறந்த மாதர்க்கு உவமை கூறுதல் மரபு என்பது அறியப்படும். இப்பாசுரத்தில் கொல்லியம் பாவை போன்றவள் என்று கூறாமல் கொல்லியம்பாவை’ என்றே சொல்லி வைத்தது முற்று வமை (உருவகம்). தாவிவையங்கொண்ட தடந்தாமரை கட்கே' (திருவாய் 6. 9; 9) என்றது போல. 39 ஓதிலும் உன்பேர் அன்றிமற் றோதாள் உருகும்.கின் திருவுரு கினைந்து காதன்மை பெரிது கையற உடையள் கயல்கெடுங் கண்துயில் மறந்தாள் 22. நற். 185, 192, 201 23. அகம்-62, 209 24. புறம்-251. 25. சீவக. 197,667 26. குறுந் 39, 100 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/134&oldid=920737" இலிருந்து மீள்விக்கப்பட்டது