பக்கம்:வைணவ உரைவளம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0. வைணவ உரைவளம் பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல் ஏதலர் முன்னா என்னினைக் திருந்தாய் இடவெங்தை எங்தை பிரானே! " (ஒதிலும்-எதைச் சொன்னாலும்; திருஉரு.திரு மேனி; காதன்மை-ஆசை, கயல்.மீன்; துயில். உறக்கம்; பிள்ளமை . சிறுபிள்ளைத்தனம் : தெள்ளியள்.தெளிவுடையவன்; வள்ளி.கொடி; மருங்குல்-இடை, ஏதலர்.பகைவர்கள்1 தாய்ப் பாசுரம் : வாய்திறந்து ஒருசொல் சொல்லுவதே அருமை. அப்படி ஒருகால் வாய் திறந்தாளாகில் அம்மா, அண்ணா என்கின்ற பேச்சை எடுப்பதே இல்லை; கோவிந்தா, கோபாலா’ என்று உன் பேரையே சொல்லு கின்றாள். இவளை என்ன செய்வதாக நினைத்திருக் கின்றாய்?' என்று திருத்தாயார் எம்பெருகானை வினவு கின்றாள். 'ஒதிலும் உன்பேரன்றி மற்றோதாள் : இந்த அடிக்கு ஒர் ஐதிகம். திருவாய்ப்பாடியில் கண்ணன் பிறந்து வளரும் காலத்தில் ஒர் ஆயமங்கை இடைவிடாது கண்ண பிரானை யே சிந்தித்துக் கொண்டு வியாமோகம் அடைந் திருந்தாள்; அது கண்ட அவள் மாமியானவள் அந்த சிந்தனையை மாற்றிவிடக் கருதி, தயிர் நெய்பால் முதலியவற்றை அவளிடம் கொடுத்து இவற்றை விற்றுவா" என்று சொல்லியனுப்பினாள். அம்மங்கை கண்ணபிரானை யன்றி வேறொன்றையும் அறியாதவளாகையாலே, மாமியின் நிர்ப்பந்தத்துக்காகக் கூடையைத் தலையிலே சுமந்து கொண்டு ,தெரு வழியே நடந்து செல்லும்போது தேயிர்! நெய்! பால்1 என்று விற்பது தவிர்ந்து கோவிந்தன் வாங்கலையோ கோவிந்தன்! தாமோதரன் வாங்கலையோ Tਗ਼ਾਨਯੋ ਛੋ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/135&oldid=920738" இலிருந்து மீள்விக்கப்பட்டது