பக்கம்:வைணவ உரைவளம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t 12 வைணவ உரைவளம் மாலிபடப் பறவையூர்ந்து : மாலி, மாலிவான், சுமாலி என்னும் அரக்கர் மூவரும் சகோதரர்கள். இவர்கள் திருமாலுடன் போர்புரிந்து தோல்வியுற்ற வரலாறு உத்தர இராமாயணத்தில் ஏழாவது சருக்கத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளது. மாலி கருடன் மீதிருந்த திருமாலுடன் போர் புரியும் போது சிறிது பங்கப்பட்டுத் தேரைவிட்டு இழிந்து கதையினால் கருடனை முகத்தில் மோதினான்; இங்ங்னம் புடைபட்ட புள்ளரசன் மிகத் துன்புற்று அவ்வேதனைக்கு ஆற்றாது திருமாலைப் போர்க்களத்தினின்றும் பின்புற மாக எழுத்தருளிக் கொண்டுபோக, திருமால் பாராமுக மாகத் திரும் பியிருக்கையிலும் அவன்மீது தமது சக்கரப் படையை விடுக்க, அது மாலியினுடைய முடியை அறுத்துத் தள்ளியது. அடியவர்கட்கு ஆரமுதம் ஆனான்: இங்கு அடியவர்கள் ஆவார் பொய்கையார், பூதத்தார், பேயார் என்னும் முதலாழ்வார்கள். அவர்கட்குத் தேனே பாலே கன்னலே யமுதே' என்றும் படியிருந்தவன் இத்தலத்து எம்பெருமான். திருக்கோவலூர் : கோபாலன் (கோவலன்) என்று வழங்கப் பெறும் ஆயனார் எழுந்தருளியிருக்கும் திவ்விய தலமாதல்பற்றி திருக்கோவலூர்' என்று திருநாம மாயிற்று. பாவரும் தமிழால் பேர்பெறு பனுவல் பாவலர் பாதிநாள் இரவில் மூவரும் நெருக்கி மொழிவிளக்கு ஏற்றி முகுந்தனைத் தொழுதநன் னாடு ' என்று வரந்தருவார் புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார்கள் மூவரும் ஒருவரையொருவர் சந்தித்து அந்தாதிபாடிய தலம் இது. அதாவது, திவ்வியப்பிரபந்தம் முதன்முதலாகத் தோன்றியது இத்தலத்தில்தான். MMAMAAASASASS 29. வில்லிபாரதம்-சிறப்புப் பாயிரம்.2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/137&oldid=920740" இலிருந்து மீள்விக்கப்பட்டது