பக்கம்:வைணவ உரைவளம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 1 17 கோரப் பல்; ஒடுக்கி - அடக்கி; கண் துயின்றவன்-யோக நித்திரை செய்தவன்; கமலம்-தாமரை; தேறல்-தேன்; அளிகுலம் -வண்டுகளின் கூட்டம்; பொதுளி-நெருங்கி: செருந்தி-சுரபுன்னை: உழிதரு-சஞ்சரிக்கப் பெற்ற1 திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருவயிந்திர புரத்தைப் பற்றிய திருமொழியில் ஒரு பாசுரம். இந்தத் திருமொழி முழுதும் முன்னிரண்டடி களில் திவ்விய தேசத்தெம்பெருமான் சிறப்பும், பின்னிரண் டடிகளில் திவ்விய தேசத்தின் சிறப்பும் சொல்லப் பெறு கின்றன. வராக அவதாரம் எடுத்து மாநிலத்தை மீட்டுக் கொணர்த்தவனும், திருப்பாற் கடலில் திருக்கண் வளர்ந்தருள்பவனுமான பெருமான் உறையும் இடம் திருவயிந்திரபுரம். இத்திருத்தலத்தில் பலபல சோலைகள் உண்டு; அவற்றில் திரள் திரளாக வண்டுகள் புகுந்து மதுவைப் பருகிக் களித்து அக்களிப்புக்குப் போக்கு வீடாக இனிய இசைகளைப் பாடிக்கொண்டு உலாவர நின்றன: உலாவும்போது செறியப் பூத்த புன்னை மரங்கள் தென் படவே அவற்றிலும் மதுவைப் பருகிச் சென்றுசேர்கின்றன. உள்ளுறைப் பொருள் (ஸ்வாபதே சார்த்தம்) : உளங் கனிந்திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறியதேன்' எனப்படும் பகவத் விஷயமாகின்ற மதுவை விரும்பியும் போந்ததென் நெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில்,தண்சீரார் தெளிதேன் உண்டு அமர்ந்திடவேண்டி" என்கிறபடியே ஆசாரிய பாதாரவிந்த மதுவைப் பருகுதலையே விரதமாக உடைத்தாயும் மேல் நோக்கிச் செல்வதற்குச் சாதனமாகிய இரண்டு சிறகுகள் போன்ற 2. பெரி. திரு. 4.3:9 3. இராமா. நூற். 100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/142&oldid=920746" இலிருந்து மீள்விக்கப்பட்டது