பக்கம்:வைணவ உரைவளம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி | 19 உகந்தது ஒரு பொருளைத் திருமேனியாகக் கொண்டு முகங்கொடுத்து நிற்பது போலே, அங்குள்ளாரும் இங்கே போந்து தாவரங்களாயும், ஜங்கமங்களாயும், விலங்கு களாயும் அவனை விடமாட்டாதே நிற்கிறபடி; நித்தியரும் முத்தரும் பத்தரில், (சம்சாரிகளில்) ருசியுடையாரும் உகந்தருளின நிலங்களைப் பற்றியன்றோ கிடப்பது... உகந்தருளின நிலங்களிலே மெய்யே பிரபத்தி விளைந் தார்க்கு அங்குள்ளவையெல்லாம் உத்தேச்யமாய்த் தோன்றுமிறே... இராமாவதாரத்திலும் ஒரு இலக்குமணன் முதலியோர்கள், வானரங்களின் உருவத்தை அடைந் தார்கள்: விபீஷணன் முதலியோர் பற்றிக் கிடந்தார்கள்:” அது போன்று.' 42 விரைக மகிழ்ந்தமென் கருங்குழல் காரணம் வில்லிறுத்து அடல்மழைக்கு கிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன் நிலவிய இடம்தடமார் வரைவ ளங் திகழ் மதகரி மருப்பொடு மலைவள ரகிலுக்தி திரைகொ ணர்ந்தணை செழுகதி திருவயிந் திரபுரமே." (விரைகமழ்-மணம் வீசுகின்ற; கருங்குழல்பிராட்டியார்; நிரை-ஆநிரைகள், வரை குடை-கோவர்த்தனக் குடை, தடம்-தடா கங்கள்; மதகரி-மதயானைகள்; மருபபுதந்தம்; திரை-அலைகள்; அணை-சேரு கின்ற; செருநதி-அழகிய ஆறு.1 7. இலக்குமணன் முதலியோர்கள்-நித்தியர்கள் 8. வானரங்களின் உருவத்தை அடைந்தவர்கள்.--தேவர்கள் 9. விபீஷணன் முதலியோர்-மு.முட்சுக்கள். 10, பெரி. திரு. 3. I;8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/144&oldid=920748" இலிருந்து மீள்விக்கப்பட்டது