பக்கம்:வைணவ உரைவளம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ተ20 வைணவ உரைவளம் தெய்வநாயகன் பக்கலிலே ரோமனுக்குரிய பராக்கிரம மும் கிருஷ்ணனுக்குரிய பராக்கிரமமும் விளங்க நின்றமை யால் அந்த இரண்டு அவதாரங்களின் சேஷ்டிதங்களையும் அநுபவிக்கின்றார் ஆழ்வார். கருங்குழல் காரணம் வில்லிறுத்து: முன்னொரு காலத் தில் தேவசிற்பியான விசுவகர்மாவால் நிருமிக்கப்பட்ட சிறந்த இரண்டு விற்களுள் ஒன்றைச் சிவபெருமானும் மற்றொன்றைத் திருமாலும் எடுத்துக் கொண்டனர். பின் பொரு காலத்தில் அவ் விற்களுள் சிறந்தது இன்னதென் பதை அறிய விரும்பிய தேவர்களின் வேண்டுகோளால் பிரமன் உருத்திரனுக்கும் விஷ்ணுவுக்கும் போரை மூட்டி விட, அங்ங்னமே அவர்கள் அவ் விற்களைக் கொண்டு பொரு கையில் சிவபிரானது வில் சிறிது முறிபட்டது, அவ்வாறு முறிபட்ட வில்லைச் சிவபிரான் ஜனககுலத்து தேவராத னென்னும் அரசனிடம் கொடுத்திட, அது வமிச பரம்பரை யாய் ஜனக மகாராசன் அளவும் வந்தது. இது நிற்க; முறிபடாத மற்றொரு வலிய வில்லை விஷ்ணுவானவர் ரிசீச முனிவனிடம் கொடுத்துச் செல்ல, அஃது அவன் குமாரனான ஜமதக்னியினிடத்தும், அவன் குமாரனான பரசுராமனிடத்தும் பரம்பரையாய் வந்தது. முற்கூறிய சிவதனுசை சீதைக்குக் கன்யாசுல்கமாக ஜனகன் வைத் திருந்தான். இராமன் அந்த வில்லை முறித்துத் தன் பேராற்றலை விளங்கச் செய்து பிராட்டியை மணந்து கொண்டதை யாவரும் அறிவர். அடல் மழைக்கு கிரை கலங்கிட...வரைகுடை எடுத்தவன்; திருவாய்ப் பாடியிலுள்ள இடையர்கள் எல்லாரும் கண்ணபிரானுடைய அற்புத சரிதைகளைக் கொண்டு இேவனே நம் குலக்கொழுந்து; இவன் சொற்படி நடப்பதே நமது கடமை!’ என்று உறுதி கொண்டிருந்தனர். இவ்வாறு இருக்கையில் சரத்காலம் வந்தது; அப்போது இடையர்கள் ஆண்டுதோறும் நடத்துவதுபோல் இந்திரனுக்குப் பூசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/145&oldid=920749" இலிருந்து மீள்விக்கப்பட்டது