பக்கம்:வைணவ உரைவளம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$22 வைணவ உரைவளம் 43 கருமுகில் போல்வதோர் மேனி கையன ஆழியும் சங்கும் பெருவிறல் வானவர் சூழ ஏழுல கும்தொழு தேத்த ஒருமகள் ஆயர் மடந்தை ஒருத்தி கிலமகள் மற்றைத் திருமக ளோடும் வருவான் சித்திர கூடத்துள் ளானே." (கருமுகில்-காளமேகம்: மேனி-உடல்: ஆழிசக்கரம்: பெருவிறல்-மிக்க சக்தியையுடைய; வானவர்-தேவர்கள்: ஏத்த-துதிக்க: ஆயர் மடந்தை-நப்பின்னை: நிலமகள்-பூமிப் பிராட்டியார்; திருமகள்-பெரிய பிராட்டி யார்.1 தில்லைத் திருச்சித்திர கூடத்துப்பற்றிய திருமொழி யில் ஒரு பாசுரம். எம்பெருமான் தேவிமாரோடு புறப்பாடு செய்யும் நிலையைப் பேசுகின்றது இப் பாசுரம். ஆயர் மடந்தை-நப்பின்னைப் பிராட்டி. இவள் கண்ணபிரானது மனைவியரில் தலைமையுடையவள்: கும்பன் என்னும் இடையர் தலைவனது மகள். இவளை மணம் செய்து கொள்ளுவதற்காகவே, இவள் தந்தை கன்யாசுல்கமாகக் குறித்தபடி யாவர்க்கும் அடங்காத அசுராவேசம் பெற்ற எழு எருதுகளையும் கண்ணபிரான் ஏழு திருவுருக் கொண்டு சென்று அவற்றின் வலியடக்கித் தழுவினன். நப்பின்னை திருமாலின் தேவியருள் நீளா தேவியின் அம்சமாகப் பிறந்தவள் என்பது வரலாறு. 11. பெரி, திரு. 3.3:9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/147&oldid=920751" இலிருந்து மீள்விக்கப்பட்டது