பக்கம்:வைணவ உரைவளம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t 24 வைணவ உரைவளம் வரலாறு எந்த இதிகாசப் புராணங்களிலும் கிடைக்க வில்லை. ஆயினும் அழகிய மணவாள சீயர் அருளிச் செய்த விவரம் உரோமேசர் உடல் முழுவதும் கரடிபோல் அடர்ந்த மயிர்களையுடைய ஒரு மாமுனிவர். இவர் நீண்டகாலம் வாழ்ந்திருந்து எம்பெருமானைச் சிந்தனை செய்ய வேண்டும் என்ற குதுரகலமுடையவராய் நீண்ட ஆயுள் பெறுவதற்காக ஒரு புண்ணிய நதிக்கரையிலிருந்து தவஞ் செய்து கொண் டிருக்கையில் அளவுகடந்த ஆனந்தம் கொண்ட சீமந் நாரா யணன் இவர் முன்னே சேவை தந்தருளி உம்முடைய விருப் பத்தைக் கூசாதே வேண்டிக் கொள்ளும்' என்று சோதிவாய் திறந்து அருளிச் செய்ய, மாமுனிவரும் இவ் வுடம்போடே உன்னை நெடுங்காலம் வழிபட வேணும் என்ற பேராசை கொண்டிருக்கின்றேன். நான்; அநேகமாயிரம் பிரமாக் களின் ஆயுளை என் ஒருவனுக்குக் கற்பித்தருளினால் மகாப் பிரசாதமாகும்" என்று கைகூப்பி விண்ணப்பம் செய்ய, எம்பெருமான் அப்படியே திருவுள்ளம் உவந்து 'மாமுனிவரே! பிரமனின் ஆயுளின் முடிவை நீர் அறிந்ததே; ஒரு பிரமன் காலஞ் சென்றால் உம்முடைய உடம்பினின் றும் ஒர் உரோமம் இற்றுவிழக் கடவது; இப்படி ஒவ்வொரு பிரம்மாவின் முடிவிலும் ஒவ்வொரு மயிராக இற்று வந்து •இனி உம்முடைய உடம்பில் ஒர் உரோமமும் இல்லை : என்று சொல்லத்தக்க நிலைமை நேரு மளவும் நீர் வாழ்ந் திருக்கக் கடவீர்!" என்று வரந் தந்தருளி மறைந் திட்டனன். 45 பாட்டரவே ரகலல்குல் பவளச் செவ்வாய் பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலா மின்சொல் மட்டவிழும் குழலிக்கா வானோர் காவில் மரங்கொணர்ந்தான் அடியணைவீர், அணில்கள் தாவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/149&oldid=920753" இலிருந்து மீள்விக்கப்பட்டது