பக்கம்:வைணவ உரைவளம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii வைணவர்கட்கு ஒர் ஒளிவிளக்கு. பண்டை நாளிலே" என்ற பாசுரத்தில் காட்டப் பெறும் இரண்டு ஐதிகங்களும் (பக்.494) சுவைமிக்கவை. என்சொல்லி என்னும் திருவாய் மொழியில் கீதைப் போவானுக்கும் திருவாய்மொழி விண் ணப்பம் செய்வானுக்கும் உள்ள வேற்றுமைபற்றிய ஐதிகம் (பக்.472) நம்மை வியக்க வைக்கின்றது. பாகவத சேஷத் துவம் அருமையினும் அருமை என்பதற்கு ஈட்டுரையில் காணும் (பக்.32), 322) இரண்டு ஐதிகங்களும் ஆழ்ந்த கருத்துடையவை. வங்கிபுரத்து நம்பி ஆய்ச்சிகள் பக்கம் நின்று சேவித்தபோது முதலியாண்டான் வார்த்தை (பக்.499) உள்ளன்பை எடுத்துக் காட்டுகின்றது. அன் பினையே பார்க்கும்" என்பதற்கு ஈட்டாசிரியர் காட்டும் ஐதிகம் நம்மை முறுவலிக்கச் செய்கின்றது. இதிகாசம் : உந்த மதகளிற்றன்" (பக். 33) என்ற திருப்பாவையில் வரும் இதிகாசத்தை அனைவரும் அறிவர். பேராசிரியர், இராமாநுசர் பிட்சை ஏற்றதைத் துறவுக்கு ஏற்ற செயல் என்று விமர்சிக்கின்றார். இந்த நிகழ்ச்சி யைத் திருப்பாவை காலட்சேபம் செய்பவர் எவரும் ஒரு சொல்சொன்னது இல்லை. அன்று நடந்த இந் நிகழ்ச்சியை நமது மனக் கண்ணால் பார்க்க நேர்ந்தால் அத்துழாயைக் கண்டதும் உடையவருக்கு ஏற்பட்ட பிரேமை அதிர்ச்சி நமக்கும் நேரும் என்பதில் ஐயம் இல்லை. நின்ற ஒர் நித்திலத்தை (பக் 95) என்பதுபற்றிய இதிகாசம் நம்மை முறுவலிக்கச் செய்கின்றது. வரை மீகானில் தடம் பருகு கருமுகிலை என்ற தொடருக்கு பட்டரின் அருளிச் செயல் (பக் 98) நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. கேள்வன் கொல்" என்ற பாசுரத்தில் வயலாளி மணவாளன் பரகாலநாயகியைக் கவர்ந்து சென்றது மறைவாகவா அல்லது பலரும் அறியவா!' என்ற வினாவுக்கு பட்டர் அருளிய இதிகாசம் (பக் 131) அகப்பொருள் சுவையை விஞ்சவைக்கின்றது. போம் பழியெல்லாம் அமணன் தலையோடே என்ற நம்பிள்ளை சூக்தியில் கண்டவரலாறு so su.–II

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/15&oldid=920754" இலிருந்து மீள்விக்கப்பட்டது