பக்கம்:வைணவ உரைவளம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 125 கெட்டிலைய கருங்கமுகின் செங்காய் வீழ ள்ே பலவின் தாழ்சினையில் நெருக்கு, பீனத் தெட்டபழம் சிதைத்துமதுச் சொரியும் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னிரே' பட்டு-பட்டுச் சேலை அணிந்துள்ள அரவுஒர்பாம்பின் படத்தை யொத்த; அல்குல்நிதம்பம்; பணை-மூங்கில்போன்று; பிணை -பெண்மான்; பாலாம்-அமுதம் போன்று; மட்டு-தேன்; வானோர்கர் - தேவலோக சோலை; குழலி - சத்தியபாமை; நெடு இலைய-நீண்ட இலைகளையுடைய; பீனம் -பருத்த, தெட்ட - கனியப் பழுத்த: சிதைந்து-நசுங்கி; மது-தேன்; சொரியும்பொழியும்) ரோம விண்ணகரம் பற்றிய பாசுரம். சத்தியபாமைப் பிராட்டிக்காக பாரிசாத மரத்தைக் கொணர்ந்த பெருமான் அடியைப்பேண விருப்புடையார்க்குக் காழிச் ரோம விண்ணகரே கதி என்கின்றார் ஆழ்வார். தெட்டபழம் : எம்பெருளானார் இத் திவ்வியப் பிரபந்த காலட்சேபம் நடத்தி வரும்போது இவ்விடத்திலுள்ள தெட்ட" என்பதற்குச் சரியான பொருள் விளங்கவில்லை என்று அருளிச் செய்து வைத்து, பின்பொருகால் திவ்விய தேச யாத்திரை எழுந்தருளும்போது இத் தலத்தின் சோலை வழியே வந்து கொண்டிருக்க, அங்கே நாவல் மரங் களின்மீது சிறு பிள்ளைகள் ஏறிப் பழம்பறியா நிற்கையில் கீழே இருந்த சில பிள்ளைகள் அண்ணே! தெட்ட பழமாகப் பார்த்துப் பறித்துப்போடு!" என்ன, அதனை யாத்ருச்சிக மாகக் கேட்டருளின எம்பெருமானார், பிள்ளாய்! தெட்ட பழமென்றால் என்ன?’ என்று வினவியருள, கனியப் 12. பெரி.திரு. 3.4:8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/150&oldid=920755" இலிருந்து மீள்விக்கப்பட்டது