பக்கம்:வைணவ உரைவளம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வைணவ உரைவளம் பழுத்த பழம்' என்று இப்பிள்ளைகள் சொல்ல, உடை யவரும் திருவுள்ளம் உவந்து இது ஒரு திசைச் சொல் போலவே இருந்தது; நம்மாழ்வாரின் திரு நாவாய்ப் பதிகத்திலே (திருவாய் 9.8:1) "குறுக்கும் வகையுண்டு கொலோ?' என்றதையொக்குமிது என்றருளிச் செய்தா ரென்று பெரியோர் பணிப்பர். 46 'துாவிரிய மலருழக்கி' (அவதாரிகை): இது மகள் பாசுரம். வயலாளி மணவாளன் விஷயமானது. இதில் முதல் நான்கு பாசுரங்களே தூதுரைப்பன; இவற்றிற்கு மேலுள்ளவை எம்பெருமானை நோக்கித் தனது ஆற்றாமையைத் தாமே சொல்லிக் கதறுவன. இங்கு ஓர் ஐதிகம் : நஞ்சீயர் நோய் வாய்ப்பட்டு இருக் கையில் அவர்தம் சீடர்களில் ஒருவரான பெற்றி என்பவர் உரையாடுகையில் இப்போது சுவாமிக்கு என்ன திரு வுள்ளம்?' என்று கேட்க, அதற்கு நஞ்சீர் துரவிரிய மலருழக்கித் திருப்பாசுரங்களைக் காதால் கேட்கவும், பெருமாள் எழுந்தருளப் பின்னும் முன்னும் சுற்றும் வந்து சேவிக்கவும் விருப்பமாயுள்ளது' என்று அருளிச் செய்தார். உடனே பெற்றி வரந்தரும் எம்பெருமாள் அரையர் என்பவரை எழுந்தருளப் பண்ணிக் கொண்டுவந்து இத் திருமொழியைச் சேவிக்கச் சொல்லிக் கேட்டருளா நிற்கை யில் நான்காம் பாசுரம் பாசுரத்திலே, தானாக கினையானேல் தன்னிணைந்து கைவேற்குஓர் மீனாய கொடி.நெடுவேள் வலிசெய்ய மெலிவேனோ?" 14. பெரி.திரு. 8.6. 15. பெரிதிரு. 8.6:4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/151&oldid=920756" இலிருந்து மீள்விக்கப்பட்டது