பக்கம்:வைணவ உரைவளம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 வைணவ உரைவளம் அவனத்தருள வேணும்; சிலை ஆளாசார்ங்கவில்லை அடக்கி ஆள்பவனே, மரம் எய்த-சப்தவால மரங்களை; நீ ஆள-உன் ஆளுகைக்குட்பட்டிருக்கும்படி வளை ஆளகையில் வளை தங்காமல்) மகள் பாசுரம்: ஒழிவில் காலமெல்லாம் உடனாய்மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் (திருவாய் 3.3:1) என்றும், நியதமும் அத்தாணிச் சேவகமும் (பெரியாழ். திரு.1.1:8) என்றும் சொல்லுகிறபடி உயிர் உள்ளவரைக்கும் உன் திருவடிகளுக்கு ஆளாகியிருக்க வேண்டுவதே கடமை; ஆயினும், இப்படி நீ திருவுள்ளம் பற்றினாலன்றி, இந்த நித்திய கைங்கரியம் கிடைக்கமாட்டாது; என்னை நித்திய கைங்கரியத்திற்கு ஆளாக்கிக் கொள்ளத் திருவுள்ள மில்லை எனினும், ஒரு நாளாகிலும் உன் திருமேனியை எனக்குத் தந்தாலாகாதோ? இதுவும் நீ செய்ய மாட்டா யாகில், அடியார்களைக் காப்பதற்காகக் கையிலே வில் பிடித்துக் கொண்டிருப்பது எதற்காக? சுக்கிரீவனுக்கு நம்பிக்கை யுண்டாக்குவதற்காக மராமரங்கள் ஏழையும் துளைத்த மிடுக்கையுடையனென்று உன்னைப் புகழ்வது எதற்காக? திருமெய்யத்தில் சத்யேசன்" என்று பெயர் படைத்திருப்பது ஏதுக்காக? நான் ஒருத்தி வாழும்படி காரியஞ் செய்யமாட்டாத உனக்கு இப் புகழெல்லாம் பொருந்துமோ?' என்று பேசுகின்றாள் ஆழ்வார் நாயகி. ஓர் ஐதிகம் : முற்காலத்தில் அம்மங்கி அம்மாள் என்ற ஒர் ஆசிரியர் நோயால் வருந்தியிருக்க, கஞ்சீயரும் நம்பிள்ளை யும் அவரைக் கண்டு நலம் விசாரிக்க எழுந்தருளியிருந்தனர்: அப்போது அவர் மிகவும் கிலேசப்படுவதைக் கண்டு நஞ்சீயர், சுவாமின் தேவரீர் சாமானிய மனிதரன்றே; எவ்வளவோ பகவத் பாகவத கைங்கரியங்கள் பண்ணி யிருக்கிறீர்; குணாதுபவத்தாலல்லது போதுபோக்கியறியீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/153&oldid=920758" இலிருந்து மீள்விக்கப்பட்டது