பக்கம்:வைணவ உரைவளம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 வைணவ உரைவளம் காண்கின்றிலள், தன்மகள் வயலாளி மணவாளனைக் குறித்து வாய்வெருவினபடியை அறிந்தவளாதலின் அப் பெருமானே இவளைக் கொண்டுபோயிருக்க வேண்டும் என்று நினைந்து எழுந்து பார்க்கின்றாள். தான் நினைத்த படியே வயலாளி மணவாளன் தன் மகன் கையைப் பிடித்து கொண்டு செல்வதைத் தன் கண்ணாலே கண்டு வாய் விட்டுப் பேசுவதாக நடக்கின்ற திருமொழியில் முதற் பாசுரம் இது. திருத்தாயார் சொல்லத் தொடங்கும் போதே கள்வன் சொல்?" என்று எம்பெருமானைக் கள்ளனாக ஐயுற்றுச் சொல்லுகின்றாள். செஞ்சொற்கவிகாள்! உயிர் காத்து ஆட்செய்மின். திருமாலிருஞ் சோலை வஞ்சக் கள்வன், மாமாயன்' அல்லவா? திருத்தாயார் தெருவில் ஓடிவந்து கேள்வன் கொல்? யானறியேன்” என்று கதறினவாறே இங்கும் அங்கும் அனைவரும் உள்ளார் திரண்டு வந்து சேர்ந்து அம்மா! என்ன அநியாயம்? கள்வனாவந்து விட்டான்? யார் அவன்? அவன் கவர்ந்து சென்ற பொருள் யாது? என்று பேரார்வமாய் வினவுகின்றனர். மேலே சொல்லுகின்றாள்: கரியான் ஒரு காளை வந்து' என்று தொடங்கி: நீலமேக நிறத்தனாய் இளம் பருவமுடைய வனான ஒருவன் என் இல்லத்தினுள் புகுந்து என் மகளைப் புேறப்படு, புறப்படு' என்று சொல்லிக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போகின்றான், காண்மின்' என் கின்றாள். இவள் அணி ஆலி புகுந்திருப்பாளோ?' என்று ஐயுற்றுக் கூறுகின்றாள் திருத்தாயார். இதுபற்றிய இதிகாசம் : பக்தர்களிடையே ஓர் இதி காசம் வழங்கி வருகின்றது. வயலாளி மணவாளன் பரகால நாயகியைக் கவர்ந்து சென்றது மறைவாகவா அல்லது பலரும் அறியவா? என்ற வினா எழுகின்றது அவர்களிடையில். மகளைத் தாய் அணைத்துக் கொண்டு கிடக்கையில் எம்பெருமான் தனிமையில் வந்து யாரும் அறியாவண்ணம் கவர்ந்து சென்றதாகப் பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/155&oldid=920760" இலிருந்து மீள்விக்கப்பட்டது