பக்கம்:வைணவ உரைவளம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 13 * யமுதனார் உரைத்தாராம்; அதனைக் கேட்டருளி பராசர பட்டர், அங்ங்னம் வேண்டா; பலரும் கண்டு கொண்டி ருக்கையில் தீவட்டிக் கொள்ளைக் கள்ளர் கொள்ளை கொண்டு போமாப்போலே கொண்டு சென்றதாக உரைப்பது எளிது' என்று அருள் செய்தாராம். வயலாளி மணவாளன் தானே வந்து அழைத்துக் கொண்டு போனதால் திருவாலிக்கே சென்று சேர்ந்தாள்" என்று உறுதியாகச் சொல்லலாமன்றோ? அங்ங்னம் சொல்லாது அணி ஆலி புகுவார் கொலோ?" என்று ஐயுற்றுச் சொல்வதற்குக் காரணம் என்ன?' என்றவினா எழுகின்றது. இதுபற்றிய இதிகாசம் இவ்வினாவிற்கு விடை யாக அமையும். உண்ணும் சோறு பருகு நீர் (6.7): என்று தொடங்கும் திருவாய்மொழியின் நடையும் இத்திகு மொழியின் நடையும் ஒரளவு ஒன்றுபோல் வந்துள்ளது. அத்திருவாய் மொழியில் பராங்குச நாயகி தானாகவே எம் பெருமான் உறையும் இடமான திருக்கோளுரை உசாசாக் கொண்டு புறப்பட்டுப் போவதாகச் சொல்லப்பெறு கின்றது; இத்திருமொழியில் எம்பெருமானே வந்து அழைத்துக் கொண்டு போனான் என்று சொல்லப்பெறு கின்றது: இவ்வளவே வேற்றுமை. ஆராய்ச்சி : ஆளவந்தாருடைய குழுவில் இவ்விரண்டு திருப்பதிகங்களையும் பற்றி ஒர் ஆராய்ச்சி நடைபெற்றது. 6:உண்ணும் சோறு திருவாய் மொழியிலும் மகன் 'உண்ணும் சோறு பருகுர்ே தின்னும்வெற் றில்ையுமெல்லாம் கண்ணன், எம்பெருமான் என்றென் றேகண்கள் நீர்மல்கி, மண்ணினுள் அவன் சீர் வளம்மிக் கவனுரர் வினவி திண்ணம் என்இள மான்புகும் ஊர்திருக்கோளுரே என்ற பாசுரமும் தலைவனது நகர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாம் இரங்குதலாக அமைந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/156&oldid=920761" இலிருந்து மீள்விக்கப்பட்டது