பக்கம்:வைணவ உரைவளம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.32 வைணவ உரைவளம் தாயைவிட்டுச் சென்றாள்; கேள்வன் கொல்!" என்ற திருமொழியிலும் மகள் தாயை விட்டுச் சென்றாள்; இவ்விருவருள் எந்த மகளுக்காகத் தாய் அதிகம் கவலைப்பட வேண்டும்? -இதுவே ஆய்வுப் பொருள். அப்போது அங்கிருந்த முதலிகள், பரகால நாயகி தனித்துச் செல்லவில்லை; நெடுமால் துணை போயின பூங்கொடியாள் (பெரி. திரு. 3; 7: 10) என்பதால் தலைமனுடன் சென்றவளாகின்றாள்; ஆகையால் அவளைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. பராங்குச நாயகியோ அப்படித்துணைகியாடு செல்லாமல் தனியே சென்றவளாகையாலே அவளைப்பற்றிக் கவலைப்பட வேண்டியுள்ளது' என்றார்கள். இதுகேட்ட ஆளவந்தார், :இப்படிச் சொல்லலாகாது: பராங்குச நாயகி தனியே சென்றாளாகிலும், தான் நினைத்த இடத்திற்குப் போய்ச் சேரவேண்டும் என்னும் ஆவலினால் எப்படியாவது விரைவிற் சென்று சேர்ந்திடுவாள். வழியில் தங்கி அபாயங் களுக்கு உட்படக் காரணம் இல்லை. ஆனதுபற்றியே திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளுர்க்கே" (திருவாய் 6: 7: 1) என்று ஐயமின்றி உறுதியாகச் சொல்லப் பெற்றது அங்கு; ஆதலின் அவளைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. பரகால நாயகியும் அப்படித் தனியே சென்றிருப்பாளாகில் அவளும் தான் சேரவேண்டிய திரு வாலியிலே சென்று சேர்ந்தே தீர்வள்; திண்ணம் என் இளமான் புகுமூர் திருவாலியே' என்று திருத்தா யாரும் உறுதியாகக் கூறியிருப்பள்; அவளைப் பற்றி யும் கவலைப்பட வேண்டாதிருக்கும். அங்ங்னமின்றி இருவராய்-தம்பதிகளாய்"-செல்லுகையாலே நாயகனு டைய வடிவழகில் ஈடுபட்டு நாயகி பைத்தியம் பிடித்தும் நாயகியின் வடிவழகில் ஈடுபட்டு நாயகன் பைத்தியம்பிடித் தும் இப்படிஇருவரும் பித்தம் தலைக் கொண்டவர்களாய்ப் போக நேருமாகையாலே செல்லவேண்டிய இடமான திருவாலியில் சென்று சேர்வர் என்று உறுதியாகக் சொல்லு வதற்கில்லை. திருவாலியில் சென்று சேர்வார்களோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/157&oldid=920762" இலிருந்து மீள்விக்கப்பட்டது