பக்கம்:வைணவ உரைவளம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii (பக் 261) கண்ணபிரான் தீம்பு செய்யாதிருந்தாலும் பிறருடையை தீம்பு அவன் தலையில் ஏறும் என்பதை அற்புதமாக விளக்குகின்றது. மிளகாழ்வானைப்பற்றிய இதிகாசம் (பக். 313) வைணவத்துவம்பற்றிய மன நிறை வைக் காட்டுகின்றது. நல்லபதத்தால் மனைவாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே' என்ற தொடரை விளக்கு வதற்கு செல்வ நம்பியின் தேவியார் செயலும் சொல்லும் (பக் 487) வைணவ பக்தர்களின் நெஞ்சை நெகிழவைக் கின்றது. சம்வாதம் :முன்னோர் தூது (2.2 : 3) என்ற திரு மங்கை மன்னன் திருமொழிக்கு பட்டர் கூறும் நயம் (பக்.83) நம்மை மெய் மறக்கச் செய்யும். கலிகன்றி...ஆவாரே' என வரும் பல சுருதிப் பாசுரத்திற்குத் தடையும் விடையு மாக நஞ்சீயருக்கும் பட்டருக்கும் தேர்ந்த உரையாடலை (பக்.102) அறிந்து அநுபவிக்கும் திறன் இல்லாதவர் செவியிற் சுவையுணரா வாயுணரும் மாக்களே யாவர். பேள்ளச் செறுவில்...புள்ளம் பூதங்குடிதானே' என்பதில் வரும் வருணனை குறித்து (பக்.140) பட்டருக்கும் ஆலவா யுடையானுக்கும் நேர்ந்த உரையில் பட்டரின் சமத்கார மான பேச்சு கூர்த்த மதியினரையும் கைகூப்பச் செய்யும். திரு நறையூர்த்தேனே' என்ற திருவிண்ணகர்ப் பாசுரத் தொடருக்கு (பக்.133) நஞ்சீயர் கேட்ட வினாவுக்கு பட்டர் அருளிய உரைநயம் பட்டரின் கூtத்த மதிக்கு ஒர் அற்புதமான எடுத்துக்காட்டு. ஆழ்பொருள் ரலோக்தி முதலியன ; இவை இந்த நூலிள் சிறப்புக்குப் பெருமை அளிக்கின்றன. பள்ளி கமலத்திடை நள்ளியூடும்" என்ற தொடருக்குப் பட்டர் கூறும் ஆழ் பொருள் (பக். 162) அவர் புலமைக்கு அடி வணங்கச் செய் கின்றது. தண்சேறை யெம்பெருமான்...என் தனை மேலாரே என்ற தொடருக்குப் பெரியவாச்சான் பிள்ளை கூறும் ரஸோக்தி (பக். 173) நம்மைப் புல்லரிக்கச் செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/16&oldid=920765" இலிருந்து மீள்விக்கப்பட்டது