பக்கம்:வைணவ உரைவளம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 36 வைணவ உரைவளம் பட்டரைப் பணிந்து கேட்க, அவ்விடத்து எருமைகளின் செளகுமார்யம் விளக்கப்பட்டதாகின்றது; முரட்டெருமை களாக இருந்தால் பதறிப் பதறி நடக்கும்; சுகுமாரமான எருமைகளாகையாலே வைகி வைகிக் கிடக்கிறபடி' என்று அருளிச் செய்தாராம். வைகுதல்.விளம்பித்தல்; அதாவது தாமதமாக நடத்தல், 5Ο தளைக்கட் டவிழ்தாமரைவைகு பொய்கைத் தடம்புக்கு அடங்கா விடங்கா லரவம் இளைக்கத் திளைத்தீட் டதனுச்சி தன்மேல் அடிவைத்த அம்மா னிடம்,மா மதியம் திளைக்கும் கொடிமா ளிகைசூழ் தெருவில் செழுமுத்து வெண்ணெற் கெனச்சென்று, முன்றில் வளைக்கை துளைப்பாவையர் மாறு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே!22 (தளை (தாமரை)-கட்டு வீரியாமல் முகையா யிருக்கும் தாமரைப் பூக்களும்; கட்டு அவிழ் தாமரை.கட்டு நெகிழ்ந்து அலர்ந்த தாமரைப் பூக்களும்; பொய்கைத்தடம்-பொய்கையில்; அடங்கா - அடங்காமல்; விடம் கால்நஞ்சைக் கக்குகின்ற; அரவம் - பாம்பு (காளியன்); திளைத்திட்டு - விளையாடி: துளைப்பாவையர்-குறத்திகள்) மணிமாடக் கோயில் விஷயமான திருமொழியில் ஒரு பாசுரம். யமுனை மடுவிலிருந்து கொண்டு அம்மடு முழுவதையும் தன் விஷாக்கினியால் கொதிப்பித்துக் கொடுமை புரிந்து வந்த காளியநாகத்தின் கொழுப்பை அடக்கி அதன் தலைமேல் நாட்டியமாடின. பெருமான் 22. பெரி.திரு. 3.8:7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/161&oldid=920767" இலிருந்து மீள்விக்கப்பட்டது