பக்கம்:வைணவ உரைவளம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 189 இதிலுள்ள இதிகாசம் : ஒரு காலத்தில் பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்து தலையுடையனா யிருப்பது பலரும் பார்த்து மயங்கு தற்கு இடமாயிருக்கிற தென்று கருதி அவனது தலையொன்றினைக் கிள்ளி எடுத்து விட்டான். அக் கபாலம் சிவனது கையில் ஒட்டிக் கொண்டது. இதற்கு என்ன செய்வது? என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கையில், தேவர்களும் முனிவர்களும் :இப் பாவம் தொலையப் பிச்சை எடுக்க வேண்டும். என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்" என்று உரைத்தனர். சிவபிரான் பலகாலம் பல தவங்களிலும் சென்று பிச்சையேற்றுக் கொண்டிருந்தே வருந்தித் திரிந்தும் அக் கபாலம் நிறைய வில்லை. பின்பொரு நாள் பதரிகாச்ரமத்தை அடைந்து அங்கெழுந்தருளியுள்ள நாராயண மூர்த்தியை வணங்கி வேண்டியபோது அவர் தன் திருமார்பைக் கீறி வியர்வை நீரை எடுத்துப் பிச்சையிட, உடனே அது நிறைந்து கையை விட்டு அகன்றது. இதே ஆழ்வார் வேறோர் இடத்திலும் (பெரி. திரு. 1.5:8:5.9:4) தொண்டரடிப் பொடியாழ்வார் தன் திருச்சந்த விருத்தத்திலும் (42) இந்த இதிகாசத்தைக் குறிப்பிட்டுள்ளனர். ஐந்தாம் பத்து 54。 கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித் துலகம் கைப்படுத்து, பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம் பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய் புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே' 1. பெரி. திரு. 5.1:2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/164&oldid=920770" இலிருந்து மீள்விக்கப்பட்டது