பக்கம்:வைணவ உரைவளம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 42 வைணவ உர்ைவளம் யையும் வேய்போன்று பருத்த தோள்களையுடைய நப்பின் னைப்பிராட்டியை மணம் புணர்ந்துகொள்ள வேண்டி, அவளது தந்தை கன்யாசுல்கமாகக் குறித்திருந்தபடி மிகக் கொடிய ஏழு கானைகளையும் வலியடக்கின எம்பெருமான் திகழுமிடம் திருப்புள்ளம் பூதங்குடியாகும்' என்கின்றார் மின்னினன்ன...மெல்லியற்கா : இதன் வியாக்கியானத் தில் கருமாரி பாய்ந்தும் அணைய வேண்டுமாய்த்து (நப்பின்னைப் பிராட்டியின்) வடிவழகு' என்ற ரீசூக்தி உள்ளது. கருமாரி பாய்த லென்பது : கச்சிமாநகரில் காமாட்சியம்மன் ஆலயத்தின் குளத்திலே நாட்டப் பெற்றிருந்த மிகக் கூர்மையான இரண்டு சூலங்களிடையே குதித்தலாம். பண்டைக் காலத்தில் ஏதேனும் கோரிக்கை நிறைவேறப் பெறவேண்டுவோர் இவ் வருந்தொழில் செய்வது வழக்கமாம். குடல் கிழிந்து சாகவேண்டும்படி யான இவ்வருந் தொழிலை வெகு சாதுர்யமாகச் செய்து அபாயமொன்று மின்றியே உயிர் தப்பி தம் கோரிக்கை நிறைவேறப் பெறுபவர்கள் மிகச் சிலரே யாவர். மிகக் கடினமான இச் செயலுக்குத் துணிந்தார்களென்றால் இதனால் அவர்கள் பெறவேண்டிய பொருள் மிகச் சிறந்த தென்பது விளங்குமன்றோ? அப்படியே நப்பின்னை திருமேனியின் சிறப்பை விளக்கவந்தது இந்த சொற்றொடர் என்பதை அறிக. புன்னை பொன்னேய தாதுதிர்க்கும் : திருச்சந்த விருத் தத்தில் காண்டமாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும் பழம், புரண்டு வீழ்வாளைபாய் குறுங்குடி நெடுந்த காய் (பாசுரம்-62) என்று அருளிச் செய்திருப்பதை அடியொற்றி அவ் விடித்துக் குளக் கரையில் இற்றைக்கும் ஒரு பனைமரம் வளர்க்கப்பட்டு வருதல்போல இங்கும் புன்னை பொன் னேய் தாதுதிர்க்கும்’ என்ற ஆழ்வார் திருவாக்கைப் பேணித் திருப்புள்ளம் பூதங்குடி சந்நிதியில் இற்றைக்கும் ஒரு திருப்புன்னை மரம் விளக்கப்பெற்று வருதல் அறியத் தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/167&oldid=920773" இலிருந்து மீள்விக்கப்பட்டது