பக்கம்:வைணவ உரைவளம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 143 56 துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றா திருளாய் மூடியநாள் அன்ன மாகி அருமறைகள் அருளிச் செய்த அமலனிடம் மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும் பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும் புள்ளம் பூதங் குடிதானே.4 (துன்னி-நெருங்கி; தோன்றாது-தெரியாதபடி: இருளாய்-ஒரே இருட்டாய்; மூடிய நாள்மூடிக் கிடந்தநாளில், அருளிச்செய்த-வெளிப் படுத்தி யருளிய, அமலன்-தூய்மையானவன்; மின்னு சோதி - விளங்குகின்ற தேசுடைய வேய் - மூங்கில், சாமரை - சாமரம்; பொன்னி - காவிரி, கொணர்ந்து - தள்ளிக் கொண்டு வந்து, அலைக்கும்-அலை எறியப் பெற்ற.1 புள்ளம் பூதங்குடி விஷயமான பாசுரம். அன்னமாகி நான்முகனுக்கு நான்மறைகளை உபதேசித்த எம்பெருமான் கோயில் கொண்டுள்ள இடம் திருப்புள்ளம் பூதங்குடி யாகும்' என்கின்றார் ஆழ்வார். இதிலுள்ள இதிகாசம் : முன் ஒரு கல்பத்தின் இறுதியில் சதுர்முகன் துயிலுகையில் அவன் முகங்களினின்றும் வெளிப்பட்டு மனித உருவத்துடன் உலவிக் கொண்டிருந்த நான்கு வேதங்களையும் மகா பலசாலியாய் அருந்தவங்கள் இயற்றிப் பெருவரங்கள் பெற்ற சோமுகன் என்னும் அசுரன் கவர்ந்துகொண்டு மூவுலகங்களையும் இருள் மூடப் பண்ணிப் பிரளய வெள்ளத்துள் மறைந்து சென்றான். இதனை யுணர்ந்த திருமால், ஒரு பெரு மீனாகத் திருவவதரித்து 4. பெரி. திரு. 5.1:9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/168&oldid=920774" இலிருந்து மீள்விக்கப்பட்டது