பக்கம்:வைணவ உரைவளம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 145 மிருந்து வேதங்களைக் கொள்ளை கொண்டு போன அசுரர் களுக்காக ஹயக்ரீவாவதாரம் செய்து கடலினுட் புகுந்து மதுகைடவர் என்னும் அசுரர்களைத் தேடிக் கண்டு பிடித்துக் கொன்று வேதங்களை மீட்டுக் கொணர்ந்து ஹம்சரூபியாய்ப் பிரமனுக்கு உபதேசித்தருளினனாதலால் அன்னமாகி அருமறை பயந்த வரலாற்றை இங்கு அதுசந்திக் கின்றார். அப்படிப்பட்ட அருமையான காரியமொன்றும் என் திறத்துச் சேய்ய வேண்டுவதில்லை; அந்த வேதங் களிலே புருஷார்த்தமாகக் கூறப்பட்டுள்ள கைங்கரியத்தை அடியேனுக்குப் பெறுவித்தருளினால் போ து ம்' என்கின்றார். (பரிமுகமாய்-ஹயக்ரீவாவதாரம்; அன்ன மாகிய-ஹம்சாவதாரம்) S@ கைம்மான மழகளிற்றைக் கடற்கிடந்த கருமணியை மைம்மான மரகதத்தை மறையுரைத்த திருமாலை எம்மானை எனக்கென்றும் இனியானைப் பணி காத்த அம்மானை, யான் கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே." [மானம் கை-நீண்ட கையையுடைய மழகளிறுஇளமையான யானை, கருமணி-நீலமணி, மைமானம்- பசுமை நிறம்; மறை-வேதம்: பனிகாத்த-மழைகாத்த அணி நீர்-அழகிய தீர்த்தம் 1 அரங்க நகர் மீதுள்ள திருமொழி; திருமங்கையாழ்வார் அருளிச் செய்தது. நீண்ட கையையுடைய யானை போன்றவனும், திருப்பாற் கடலில் கண் வளர்ந்தருள்கின்ற 7. பெரி. திரு. 5,6;1 வை,-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/170&oldid=920777" இலிருந்து மீள்விக்கப்பட்டது