பக்கம்:வைணவ உரைவளம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 46 வைணவ உரைவளம் வனும், வேதங்களில் குறிப்பிடப்பெறுபவனும், எனக்குச் சுவாமியானவனும், எனக்கு எக்காலத்திலும் போக்கியமாக இருப்பவனும், குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவனுமான எம்பெருமானை நான் சேவிக்கப்பெற்றது திருவரங்கத் தில்' என்கின்றார். கைம்மான மழகளிற்றை : ஒரு யானை கைகளையும் கால்களையும் பரப்பிக் கொண்டு கிடப்பதுப் போலப் பள்ளி கொண்டிருக்கும் அழகில் ஈடுபட்டுச் சொல்லுகிறபடி, :தென்னானாய், வடவானாய், குடபாலானாய், குணபால மதயானாய்' என்று மீண்டும் அருளிச் செய்வர் இவ் வாழ்வார். என்னானை என்னப்பன் எம்பெருமான்' என்றார் சடகோபரும். யானைக்கும் எம்பெருமானுக்கும் பலவிதமாக ஒப்புமை உண்டு. (1) யானை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க் கும்போதெல்லாம் அரிய பொருள்போல் பரமானந்தத் தைத் தரும்; எம் பெருமானும் அப்பொழுதைக்கப் பொழுது என் ஆராவமுதமே (திருவாய். 2.5:4) என்று இருப்பான். (2) யானையின்மீது ஏறவேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏறவேண்டும்; எம்பெருமானிடம் சேர வேண்டியவர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேர வேண்டும். (3) யானை தன்னைக் கட்டத் தானே கயிறு கொடுக்கும்; எட்டினோடி ரண்டெனும் கயிற்றினால்' (திருச் சந்த, 83) என்றபடி எம்பெருமானைக் கட்டுப் படுத்தும் பக்தியாகின்ற கயிற்றை அவன் தானே தந்தருள் வான். மதிநலம் அருளினவன்.'" (திருவாய் 1.1,1) 8. திருநெடுந் 10 9. திருவாய். 3.9, I

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/171&oldid=920778" இலிருந்து மீள்விக்கப்பட்டது