பக்கம்:வைணவ உரைவளம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வைணவ உரைவளம் (10) யானைக்குக் கைநீளம்; எம்பெருமானும் அலம்புரி நெடுந்தடக்கை ஆயன் (பெரி. திரு. 1.6:2) அன்றோ? நீண்ட வத்தை; கருமுகிலை (பெரி. திரு. 2.5:2). (11) யானை இறந்த பின்பும் உதவும்; எம்பெருமா னும் தீர்த்தம் சாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந் தருளின பின்பும் இதிகாச புராணங்கள் அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதங்களை உதவுகின்றானன்றோ? (12) யானைக்கு ஒரு கையே உள்ளது; எம்பெருமா னுக்கும் கொடுக்கும் கையொழியக் கொள்ளும் கை இல்லை யன்றோ? விரும்பப்பட்ட பொருள்களைக் கொடுப்பதில் உறுதியான எண்ணமுடையவன்.' (அர்த்திதார்த்த பரிதாந தீட்தம்) (13) பாகனுக்கு வாழ்க்கைக்குரிய பொருள்களைச் சம்பாதித்துக் கொடுக்கும் யானை; எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகர்களுக்கு உதவுவான். இங்ங்னம் பல உவமைப் பொருத்தங்களைக் கண்டு கொள்ளலாம். 59 வாத மாமகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதியென் றொழிந்திலை,உகந்து காதல் ஆதரம் கடலினும் பெருகச் செய்த கவினுக் கில்லைகைம் மாறென்று கோதில் வாய்மையி னானொடும் உடனே உண்பன் நான் என்ற ஒண்பொருள் எனக்கும் ஆதல் வேண்டுமென் றடியிணை அடைந்தேன் அணிபொ ழில் திரு வரங்கத் தம்மானே!" 10, பெரி. திரு. 5,8;2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/173&oldid=920780" இலிருந்து மீள்விக்கப்பட்டது