பக்கம்:வைணவ உரைவளம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 151 இவன் தேவரீரோடு கூடவே அத்தாணிச்சேவகனாயிருந்து நித்தியாநுபவம் பண்ணிக் களிக்க விரும்பியிருக்கிறேன்" என்றான். இவன்றான் * உன்ஞவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்தறியும்' எம்பெருமான் அவனுடைய நாபி யிலுள்ள உண்மைக் கருத்தை உள்ளபடியே கண்டறிய வல்லவனாதலால் இவனுக்கு நம்மோடு நித்தியாதுபவம் பண்ணுகைதான் உண்மையான விருப்பமோ?" என்று ஆராய்ந்து பார்த்தான்; பார்த்ததில் இவனுக்கு இந்திரிய இன்பங்களில் இன்னமும் நசைவிட்ட பாடில்லை" என்றறிந்து, அந்தணா! நீ இன்னும் சிறிது காலம் இந் நிலத்திலேயே இருந்து இந்திரிய இன்பங்களை ஆசை தீர அநுபவித்துத் தலைக்கட்டி, பின்பு நம்மோடே வரக் கடவாய்' என்று அருளிச் செய்து மறைந்ததாக ஓர் இதிகாசம் உண்டு; அஃது இப் பாசுரத்தில் அருளிச் செய்யப் பெறுகின்றது. (இவ்வரலாறு எந்த இதிகாச புராணங் களிலும் காணப்படாதது.) இங்கே ஓர் ஐயம் : எம்பெருமான் தன்னடி சேர விரும்புவார் யாரேனும் உண்டா? என்று ஆள் பார்த்துத் திரிகின்றவன், வீடுபேற்றில் நாட்டம் இல்லாதவர்களுக்கும் எவ்வகையிலேனும் நாட்டத்தைப் பிறப்பித்து நித்திய கைங்கரியத்தைத் தந்தருள்பவன் என்ற புகழ் இவனுக்கு உண்டு. இப்படிப்பட்ட எம்பெருமான் உன்னோடு கூடவே வர விரும்புகின்றேன்' என்று சொல்லும் ஒரு பேரறிவாளனைப் பெற்றால் பெரு மகிழ்ச்சி கொண்டு அப்பா! வாராய்; உன்னையே தேடித் திரிகின்றேன்; கடுகவா போவோம்' என்று ஆதரித்து அழைத்துக் கொண்டு போக உரியவனேயன்றி கெட்ட வழியைக் காட்டி ஒழிந்து போ' என்னத் தக்கவனல்லன்; அப்படியிருந்தும், கூட வருவேன்' என்ற கோவிந்தசாமியைப்பெருமான் அலட்சியம் செய்து வார்த்தை சொன்னது ஏன்? என்று ஐயுறலாம். 18. திருமாலை-84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/176&oldid=920783" இலிருந்து மீள்விக்கப்பட்டது