பக்கம்:வைணவ உரைவளம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 வைணவ உரைவளம் இதற்கு நாம் என்ன சொல்ல வல்லோம்? எம்பெருமா னுடைய சுவாதந்திரியம் விசித்திரமானது; சம்சாரத்தில் சிறிதும் பற்று இல்லாதவர்களை சம்சாரத்தில் வீழ்த்து கின்றான்; மோட்சத்தில் விருப்பமில்லாதவர்களை மோட்சத்திற்குக் கொண்டு சேர்க்கவும் தனக்குள்ள சுவாதந்திரியத்தை சிலர் திறத்தில் அவன் காட்டுவதுண்டு. இங்கே வியாக்கியான சூக்தி காண்மின்: ஈசுவரன் நினைத் தால் விஷய ப்ரவணனாயும் இவ்வாசனையே அறுத்துக் கொண்டு சக்தன் என்னுமிடமும், எத்தனையேனும் பகவத் ப்ரவனரையும் தேக சம்பந்தத்தின் வழியே கொண்டு போய் விநாசத்தைப் பலிப்பிக்கும் என்னுமிடமும் வெளி யிட்டது. சாதுக்களுக்கிடையே உபமான பூமியாயிருக்கிற பூரீபிரகலாதனும் கூட எதிரம்பு கோத்தான்.' ஆறாம்பத்து 61 மானேய் நோக்குநல்லார் மதியோல் முகத்துலவும் ஊனேய் கண்வாளிக், குடைந்தோட்டங் துன்னடைங்கேன் கோனே! குறுங்குடியுள் குழகா திருறையூர் தேனே! வருபுனல் சூழ் திருவிண் ணகரானே! " (மானேய் நோக்கு - மான் பார்வை போன்ற; நல்லார்-மாதர்கள்; மதி-சந்திரன்; வாளிஅம்பு; உடைந்து-அஞ்சி நடுங்கி; ஒட்டந்துஓடிவந்து: குழகா-கலந்து கொள்ள நிற்பவனே) 1. பெரி. திரு. 3.8:8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/177&oldid=920784" இலிருந்து மீள்விக்கப்பட்டது