பக்கம்:வைணவ உரைவளம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 வைணவ உரைவளம் எடுத்து விட்டார். அதனுட் புகுந்த அந்த மீன் ஓரிரவுக்குள் கமண்டலத்துக்குள் நிரம்பி மறுநாள் காலையில் ஒகருணா நிதியே! நான் எப்படி உம்முடைய கலசத்துக்குள் இடர்ப் பட்டு வாழ்வது? என்மீது அருள் புரியலாகாதா?’ என்றது. உடனே அவர் கமண்டலத்தினின்றும் எடுத்துதி தன்னிடத் துள்ள சந்தன நீரில் புகவிட்டார்; உடனே மூன்றடி அளவு வளர்ந்த அந்த மீன் என்னை இப்படித் துயருறும்படிவிட்டு வைப்பது அறமா?’ என்றது; அன்பு கூர்ந்த அவர் உடனே அதை எடுத்து ஒர் குளத்தினுள் விட்டார். அங்கும் மிக வளர்ந்த அந்த மீன் நான் சுகமாக வசிக்க இடம் பெறாமல் வருந்துவது உமது திருவுள்ளத்திற்கு உகப்போ?' என்றது. அதைக் கேட்டுக் கருணை கூர்ந்த அவர் அதனை எடுத்துக் கடலில் விட்டார்; அப்பால் அந்த சத்திய விரதர் அந்த மீனிடத்துப் பெருமயல் கொண்டு அதனை நோக்கி, ஒ மீனரசனே! உன்னுடைய வரலாற்றைத் தெரிந்து கொள்ள மிக்க ஆவலுடையவனாக இருக்கின்றேன்; நூறு யோசனை நீளமும் அதற்குத் தக்க பருமனும் வாய்ந்துள்ள நீ யார்? உனது தத்துவத்தை வெளியிட வேண்டும்’ என்று கைகூப்பிப் பிரார்த்தித்தார். அந்த மச்ச அரசன், ஒ மாமுனிவரே! இன்று முதல் ஏழு நாட்களுக்குள் இந்த மூன்று உலகங்களும் மூழ்கிவிடப் போகின்றன; அந்தப் பெரு நீரில் ஒரு விசாடமான ஒடம் வரப் போகின்றது; அந்தப் படகில் சப்த ரிஷிகளும் நீரும் எல்லா ஒவுதிகளும் எல்லாவகைப் பிராணிகளும் ஏறி மனத்திற்கு வருத்தமொன்றுமின்றி உலாவக் கடவீர்கள்; இப்படிச் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்போது ஒரு பெருங் காற்று வீசும்; அதனால் அந்த ஒடம் பெருநீரில் அலையும்; அப்பொழுது எனது தலையில் முளைத்துள்ள பெரியதொரு கொம்பில் பெரியதொரு பாம்பினால் அந்த ஒடத்தைக் கட்டி விடுக; பிறகு நான் அந்தப் படகுடன் உம்மையும் எல்லாப் பிராணிகளையும் ரிஷிகளையும் சுமந்து கொண்டு அந்தப் பேரிருள் நீங்கும் வரையில் நான் கடலில் சஞ்சரிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/183&oldid=920791" இலிருந்து மீள்விக்கப்பட்டது