பக்கம்:வைணவ உரைவளம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி ! 63 மலர் முடிக் கொன்ரும் சமயமும் ஒன்றாக இருந்தது. இதனைப் பார்த்தால், ஆண் இரவில் வேறிடத்தில் தங்கி வந்தபடியாலும், உடம்பில் சுவடு இருந்தபடியாலும் ஊடல்கொண்டுக் கதவை அடைத்துக் கொண்டது என்று எண்ணும்படியாக இருந்ததாம். ஒருபுறத்தில் மலர்ந்த தாமரை மலர்களும் மற்றொரு புறத்தில் கூம்பியிருக்கும் ஆம்பல் மலர்களும் விளங்கப்பெற்ற வயலைச் சொன்ன வாறு இது. இவ்வாறு பட்டர் விளக்கம் தந்தவுடனே பிள்ளை நறையூர் அரையர் ஆராய்ந்து குற்றம் நிரம்பினால் பின்னையன்றோ தண்டிப்பது?" என்று கூற, என் செய் வோம்? கேள்வி இல்லாதபடி பெண்ணரசு ,நாடாய்த்தே!" என்று அருளிச் செய்தாராம். இதனால் "நாச்சியார் கோயில் புகழ்பெற்றபெயரைக் குறிப்பிட்டவாராம். (இவ் வூரில் எல்லாவற்றிற்கும் பிராட்டிக்கே முதலிடம்.திருவிதிப் புறப்பாடுகளில் நாச்சியார் முன்னே எழுந்தருள்வதும், எம் பெருமான் பின்னே எழுந்தருள்வதும் ஆக இருக்கும், ஆணரசு நாடாகில் கேட் பாருண்டு; பெண்ணரசு நாடாத லால் கேட்பாரில்லை என்று சுவைபடக் கூறியதாம்). 67 பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல்மன்னர் கலங்கச் சங்கம் வாய்வைத்தான் செந்தா மரைமேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர் நந்தா வண்கை மறையோர்வாழ் கறையூர் கின்ற கம்பியே" HQ, Guß. திரு. 6. 7& 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/188&oldid=920796" இலிருந்து மீள்விக்கப்பட்டது