பக்கம்:வைணவ உரைவளம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் சேய பங்கயச் சிறுவிடில் அங்கையில் திரட்டிய நறுவெண்ணெய் ஆயர் மங்கையர் இடஇட அமுதுசெய் தாடிய திருக்கூத்தும் நேய மும் குறு முறுவலும் புரிந்து பார்த் தருளிய நெடுங்கண்ணும் மாய வன்திரு வடிவமும் அழகும்என் மனத்தைவிட் டகலாவே! -வில்லிபுத்துாராழ்வார் ஆண்டவன் அருளின்றி எதுவும் நடைபெறாது என்பது மெய்ப்பொருள் உணர்த்தும் உண்மை. அவனன்றி ஒர் அணுவும் அசையாது’ என்ற பழமொழி உணர்த்துவதும் இவ்வுண்மையையேயாகும். பி. எஸ்.சி., எல். டி. பட்டங்கள் பெற்று உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கி அதில் தலைமையாசிரியனாகப் பணியாற்றிய அடியேனை அடியேனின் நுகர்வினை (பிராரத்தம்) பல்கலைக் கழக விதியாக அமைந்து எம். ஏ. பட்டம் பெறுவதற்குப் பத்தாண்டுகளும், பிஎச். டி. பட்டம் பெறுவதற்குப் பதினைந்து ஆண்டுகளும், ஆக இருபதிதைந்து ஆண்டுகள் பெற முடியாமல் தடுத்து நிறுத்தின. 1. வில்லிபாரதம்.நச்சுப்பொய்கை.கடவுள் வாழ்த்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/19&oldid=920798" இலிருந்து மீள்விக்கப்பட்டது