பக்கம்:வைணவ உரைவளம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 165 கண்டால் சக்தியுள்ளதனாகில் விலக்க வேண்டும்; சக்தி யற்றவனாகில் வருத்தத்துடன், கண்மறையப் போக வேண்டும்’ என்கிற விஷே சாஸ்திர மரியாதையை நோக்கி யாவது-அல்லது- தங்களிடத்தில் கண்ணனுக்குள்ள நட்பு முறைகளை நினைத்து அவனைச் சரணமடைந்தவள் மான பங்கப்படுவதை நாம் பார்த்திருந்தால் நாளைக்கு அவன் முகத்தில் எப்படி விழிப்பது என்று அஞ்சியாவது விரைந் தெழுந்து விலக்கவேண்டும். அது செய்யாமல் செயலற்று அமர்ந்திருந்தனர். ஆகவே, மானபங்கம் செய்த துரியோ தனாதியர்களைப் போலவே, மானபங்கம் செய்வதைப் பார்த்திருந்த இப்பாண்டவர்களையும் தலையறுத்துப் போட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அவர்களை மாத்திரம் உயிரோடு வாழும்படி வைத்தல் அவளுடைய மங்கலநாண் போகாமைக்காக. அவளுடைய விரித்த தலையைக் காணமாட்டாத கண்ணன் வெறுங் கழுத்தை எப்படிக் காண்பன்? (இதனால் அடியவர்களை அவமானப் படுத்துபவர்களைப் போலவே அந்த அவமானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் தண்டிக்கத்தக்கவரி என்பதும், அப்படித் தண்டனைக்குரியவர்கள் அடியார் களோடு விடவொண்ணாத ஒரு சம்பந்தமுடையவர் களாகில் அவர்களும் அந்த அடியவர்களுக்காக எம்பெரு மானால் இரட்சிக்கப்படுபவர் என்பதும் விளங்கும்). இப்படித் தலையறுத்துப் போடவேண்டும்படியான குற்ற வாளிகளுள் ஒருவன் பார்த்தன். இந்தப் பார்த்தனுக்குக் கண்ணன் இழிதொழில் செய்ததும் பரம ரகஸ்யத்தை (பிரபத்திநெறியை) உபதேசித்ததும் எல்லாம் இந்த திரெளபதிக்காகவேயாகும். தூதுபோனது போரை விளை விப்பதற்காக. சாரதியாய் நின்றது படை எடுக்கக்கூடாது" என்ற எதிரிகளின் வேண்டுகோளுக்கு உடன்பட்டிருந்தமை யால் தேர்க்காலாலே அவ்வெதிரிகளை அழிப்பதற்காக. பிரபத்தியை உபதேசித்தது போர் செய்யேன்" என்றிருந்த வனை உன்சொற்படி செய்கிறேன்" என இசைவித்துப் போரிலே ஈடுபடுத்ததுவதற்காக. ஆக இவையெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/190&oldid=920799" இலிருந்து மீள்விக்கப்பட்டது