பக்கம்:வைணவ உரைவளம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 187 அப் படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற் பிளப்புகளால் மேலே மூடி அதன்மேல் சிறந்த இரத்தி னாசனமொன்று அமைத்து அந்த ஆசனத்தில் கண்ணனை எழுந்தருளச் சொல்ல, அங்ங்னமே கண்ணன் அதன்மீது ஏறியவுடன் மூங்கிற் பிளப்புகள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கிப் பிலவறையினுள்,சென்றபோது அப்பெருமான் மிகப் பெரிதாக விசுவரூபம் எடுத்துப் பல கைகளையும் கால்களையும் கொண்டு எதிர்க்கவே அப் பிலவறையி லிருந்த மல்லர்கள் அழிந்தனர். அப்போது கொண்ட பேருருவத்திற்கு நினைவாகப் பெரிய திருமேனியுடன் சேவை சாதிக்குமிடம் பாடகம் ஆகும். பாடு + அகலம்= பாடகம்; பெருமையுடைய சந்நிதி, ஏழாம் பத்து 69 கறவா மடகாகுதன் கன்றுள்ளி னாற்போல் மறவா தடியேன் உன்னையே யழைக்கின்றேன் கறவார் பொழில்சூழ் நறையூர் கின்றரும்பி பிறவாமை யெனைப்பணி எங்தை பிரானே! (கறவா-பால்சுரவாத; மடதாகு-இளம் பசுவை: தன் கன்று-அதன் கன்று; உள்ளினாற்போல்நினைத்துக் கத்துவதுபோல்; மறவாது - 1. பெரி. திரு 7.1:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/192&oldid=920801" இலிருந்து மீள்விக்கப்பட்டது