பக்கம்:வைணவ உரைவளம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 வைணவ உரைவளம் மறக்காமல், எனை-என்னை; பிறாவாமைசம்சாரத்தில் பிறவாதபடி, பணி-செய் தருளாய்!

  • நறையூர்ப் பெருமானே! உன்னை இடைவிடாது அநுபவிப்பதற்கு இடையூறாக விருக்கும் சம்சார சம்பந் தத்தை நீக்குவாய்; கன்றுக் குட்டி தன் தாய்ப்பசு பால் சுரவாவிடில், அதனையே நினைத்துக் கத்துவதுபோலவே பேறு பெறாத அடியேன் ஓயாது உன்னையே சொல்லிக் கதறுகின்றேன்' என்கின்றார்.

ஐதிகம் பிள்ளை யமுதனார் என்னும் ஆசிரியர் இப் பாசுரத்தின் முதலடிக்குப் பொருள் சொல்ல நினைந்து கறவா மடநாகு.கறவாத மடநாகானது; தன் கன்று உள் ளினாற்போல்' என்று பொருள் சொல்லப் பார்த்து இல் பொருள் இரண்டாம் அடியோடு சேராமையாலும் வேறு வகையாகப் பொருள்சொல்லப்புரியாமலும் சிறிது வருத்தப் பட்டார். (நாகானது தன் கன்றை நினைக்கு மாப்போலே என்றால் நாகின் நிலையில் ஆழ்வாரான தம்மையும், கன்றின் நிலையில் எம்பெருமானையும் கொள்ள வேண்டி வருவதால் மிகவும் சங்கடப்பட்டார். அப்போது பட்டரிடத் தில் பொருள் கேட்ட ஒருவர் அவ்வமுதனார் கோஷ்டியில் இருக்கக் கண்டு அவரை நோக்கி, இவ்விடத்திற்குப் பட்டர் நிர்வகிப்பது எங்ங்னே?' என்று கேட்க: நாகு" என்பதில் இரண்டாம் வேற்றுமை தொக்கியிருப்பதாகக் கொண்டு, கறவா மட நாகைத் தன் கன்றுள்ளினாற்போல் என்பது பட்டர் நிர்வாகம் என்றாராம். "நாகு தன்-நாகி னுடைய, கன்றானது உள்ளினாற் போல-தாயையே நினைத்துக் கத்துவதுபோலே" என்றுரைப்பதும் உண்டு. தாகு-இளம் பசு. பால் சுரவாத பசுவின் நிலையில் அருள் புரியாத எம்பெருமான் கொள்ளப்பட்டான்; கத்துகின்ற கன்றின் நிலையில் தம்மை வைத்துக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/193&oldid=920802" இலிருந்து மீள்விக்கப்பட்டது