பக்கம்:வைணவ உரைவளம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 வைணவ உரைவளம் ஈசுவர கைங்கரியத்தையும் இழந்து, இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே, சம்சாரமாகின்ற பெருங்கடலிலே விழுந்து நோவுபட, சர்வேசுவரன், தன் கிருபையாலே இவர்கள் தன்னையறிந்து கரை மரஞ் சேரும்படி, தானே சிஷ்யனு மாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்திரத்தை வெளியிட் டருளினான், ::சிஷ்யனாய் நின்றது சி ஷ் ய ன் இருக்கும் இருப்பு நாட்டாரறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக" என்ற முமுட்கப்படி சூக்தியையும் காண்க. ア! மன்னஞ்ச ஆயிரக்தோள் மழுவில் துணித்தமைந்தா என்நெஞ்சத் துள்ளிருந்திங் கினிப்போய்ப் பிறரொருவர் வன்னெஞசம் புக்கிருக்க வொட்டேன் வளைத்துவைத்தேன் கன்னெஞ்ச அன்னம்மன்னும் கறையூர்கின்ற நம்பியோ!' (மன் அஞ்ச-rத்திரியர்கள் அஞ்சும்படியாக: மழுவின்-கோடறிப்படையினால், துணித்த - அறுத்தொழித்த: பிறர் ஒருவர் - வேறொருவர்; வல் நெஞ்சம் - கடினமான நெஞ்சிலே; புக்கு இருக்க-புகுந்து இருக்க: ஒட்டேன்-சம்மதிக்க மாட்டேன்; வளைத்து -தடைசெய்து; நல்நெஞ்சம்- நல்ல இதயம்; அன்னம் - அன்ன மென்னடையாலான பிராட்டி; மன்னும்-பொருந்தி வாழும்.1 3. முமுட்கப்படி 5, 6. 4. பெரி.திரு. 7.2:7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/195&oldid=920804" இலிருந்து மீள்விக்கப்பட்டது