பக்கம்:வைணவ உரைவளம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 வைணவ உரைவளம் !தாய் நினைந்த-தன் தாயாகிய பசுவை நினைக்கும்; கன்றே ஒக்க-கன்று போல; தன்னையே நினைக்கச் செய்து-எம்பெருமா னாகிய தன்னையே சிந்திக்கும்படி பண்ணி: தான் எனக்குஆய் நினைந்து"- எனக்கு வேண்டிய நன்மைகளை யெல்லாம் தானே சிந்தித்து; மைந்தனை-நித்திய இளைஞனை; இடை கழி ஆயன்-இடைக் கழியில் நின்ற கோபாலன்: ஆதரியேன்-ஆதரிக்க மாட் டேன்; கன்று எப்பொழுதும் தன் தாயையோ நினைத்துக் கொண்டிருக்குமாப்போல உலகுக்கெல்லாம் தாயாகிய எம்பெருமானை நான் நினைக்குமாறு செய்தவன். நம் முடைய நினைவு மாறினாலும் தான் நினைவு மாறாமல் நம்மை நினைத்திருந்து அருள் செய்பவன், உலகமெல்லாம் பிரளயாபத்துக்குத் தப்பிப் பிழைக்கும்படி தானே பாது காத்தருளின செயல் இதற்கு எடுத்துக் காட்டாகும்' என்கின்றார் ஆழ்வார். மதிள் கோவலிடை ஆயனை : பாவருந் தமிழாற் பேர்பெறு பனுவல் பாதிநாள் இரவில், மூவரும் நெருக்கி முகுந்தனைத் தொழுத நன்னாடு' என்று புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார்கள் மூவரும் (பொய்கையார், பூதத்தார், பேயார்) ஒருவரையொருவர் சந்தித்துத் திருவந்தாதிகள் பாடின தலம் திருக்கோவலூர். யுேம் திருமகளும் கின்றாயால், குன்றெடுத்துப் பாயும் பனிமறுத்த பண்பாளா!-வாசல் கடைகழியா உள்புகா காமர்பூங் கோவல் இடைகழியே பற்றி இனி. (முதல். திரு. 86) - 6. வில்லி பாரதம்-சிறப்புப் பாயிரம்-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/197&oldid=920806" இலிருந்து மீள்விக்கப்பட்டது