பக்கம்:வைணவ உரைவளம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 1 73 என்ற பொய்கையார் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றிப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் உகந்தார் நடுவே புகுந்து நெருக்குமவனை' என்று அருளிச் செய்யப் பட்டுள்ள வாக்கியம் சிந்திக்கத் தக்கது. 73 'கண்சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல்போல் கூந்த லாளை மண்சோர முலையுண்ட மாமதலாய்! வானவர்தம் கோவே' என்று விண்சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு மணிமாட மல்கு, செல்வத் தண்சேறை யெம்பெருமான் தாள்தொழுவார் காண்மின்என் தலைமே லாரே." (சோர-சுழலவிட்டுத்தளர, குருதி-இரத்தம்; இழிய-பெருக, மண்சேர-மாண்டு போம் படி; வெந்தழல்போல் - நெருப்புப்போல்: விண்சேரும்-ஆகாயத்தில் திரிகின்ற; அகடுகீழ்வயிறு; உரிஞ்சு-அளாவுகின்ற; மணி மாடம்-திருமாளிகைகள்: மல்கு-நிறைந் திருக்கப்பெற்ற; தண் - குளிர்ந்த; தாள்திருவடிகள்; தொழுவார்-வணங்குபவர்கள்; என் தலை மேலார்-என் தலைமேல் வீற்றி ருக்க உரியார்) திருச்சேறையின் மீதுள்ள திருமொழி இது; திருமங்கை யாழ்வார் அருளிச் செய்தது. மதி,மண்டலத்தளவும் 7. பெரி.திரு 7.4.1,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/198&oldid=920807" இலிருந்து மீள்விக்கப்பட்டது