பக்கம்:வைணவ உரைவளம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 74 வைணவ உரைவளம் ஓங்கியிருக்கின்ற மாடமாளிகைகள் நிறைந்த திருச்சேறை யில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை நோக்கிப் 'பூதனையை முடித்த சிறு குழந்தாய்!" என்றும், "நித்திய சூரிகட்குத் தலைவனே!' என்றும் சொல்லி அவனுடைய பரத்துவ செளலப்பியங்களைப்பற்றி உருகுகின்ற பாகவதர் கள் எவரோ, அவர்கள் என் தலைமேல் வீற்றிருக்க உரியார்' என்கின்றார். ஐதிகம் : “பிள்ளையழகிய மணவாளரையர் கரையே போகா நிற்க, உள்ளே மாமமதலைப் பிரானைத் திருவடி தொழுது போனாலோ?’ என்ன, ஆர்தான் திருமங்கை யாழ்வாருடைய பசைந்த வளையத்திலே (வளையம்திருமுடியிலணியும் மாலை) கால்வைக்க வல்லார்?" என்றருளிச் செய்தார் -இது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானப் பிரவேசத்தில் கண்டது. விளக்கம் : பிள்ளையழகிய மணவாளரையர் என்பவர் ஏதோ ஒருவேலையாக திருச்சேறை வழியாய் ஓரிடத்திற்கு எழுந்தருள நேர்ந்தது. அவர் திருச்சேறைப் பதியினுட் புகாமல் வயல் வழியே போய்க் கொண்டிருந்தார்; அவரைகி கண்டாரொருவர் வயல் வழியே போவானேன்? திருப்பதியி னுள்ளே புகுந்து சாரநாதப் பெருமாளைச் சேவித்துப் போகலாகாதோ?’ என்று கேட்டார். அதற்கு அரையர் சமத்காரமாக ஓர் உத்தரம் உரைத்தார்; அது யாதெனில்: :இத்திருப்பதி விஷயமாகத் திருமங்கையாழ்வார் தண் சேறை எம் பெருமான் தாள்தொழுவார் காண்மின் என் தலை மேலாரே' என்றார்; அப்பாசுரத்தின்படி, திருச் சேறை எம்பெருமானைச் சேவிப்பவர்கள் ஆழ்வாரின் திருமுடியின்மேல் ஏற வேண்டியதாகுமே; அது பெருத்த அபசாரம் அல்லவா? அதற்கு அஞ்சியே உள்ளுப்புகாமல் கரையோரமே போகிறேன்' என்றாராம். இது ரஸோக் தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/199&oldid=920808" இலிருந்து மீள்விக்கப்பட்டது