பக்கம்:வைணவ உரைவளம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ххіі அடியேனின் முன்னோர் நல்வினைப் பயனும் அடியே னின் நல்வினைப் பயனும் பதினேழு ஆண்டுகள் திருப்பதியி லுள்ள பல்கலைக் கழகத்தில் அடியேனைக் கருவியாகக் கொண்டு பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலாகிய" ஏழுமலையான் தமிழ்த்துறையைத் தொடங்க வைத்து அதனை வளர்க்கவும் வாய்ப்பளித் தான். அடியேனைச் சார்ந்த இடத்தின் வண்ணமாகவும் செய்தான். அந்தர்யாமியாக இருந்து கொண்டு அடியேனின் பிஎச். டி. பட்டத்திற்கு நாலாயிரத்தில் நம்மாழ்வார் தத்துவம்" என்ற பொருள் பற்றி ஆயவும் வழிவகுத்தான். ஐந்தாண்டு. கள் ஆழ்வார்கள் பாசுரங்களில் ஆழங்கால் பட்டேன். பாசுரங்களைப் பயிலும்போது உள்ளம் உருகியது. கண்ணிர் ஆறாகப் பெருகியது. பக்தியின் கொடு முடியை எட்டியது. போன்ற அநுபவம் கிட்டியது. பட்டமும் பெற்றேன். இதுவே அடியேனின் இம்மை வாழ்வின் பொற்காலமாக, அமைந்ததாகக் கருதுகின்றேன். பட்டம் பெற்றதால் இம்மைப் பயன் கணிசமாக இல்லையெனினும் பாசுரங் களால் அடைந்த மனப்பக்குவம் மறுமைப் பயனுக்கு வழியமைத்ததாக அதிராத நம்பிக்கை கொள்ளுகின்றேன். ஓய்வு பெற்று 1978.ஜனவரி 14ஆம் நாள் சென்னையில் குடியேறியதிலிருந்து, பழுதே பலபகலும் போயினனன் றஞ்சி அழுதேன்2 வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது” என்று என் காலம் கழிகின்றது. ஆழங்காட் பட்ட பாசுரங்: களை அசைபோடுகின்றேன். உரை வளத்தில் ஈடுபட்டு: 2. முதல். திருவந். 16 3. நான். திருவந், 63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/20&oldid=920809" இலிருந்து மீள்விக்கப்பட்டது