பக்கம்:வைணவ உரைவளம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 வைணவ உரைவளம் சந்நிதியில் தமோபியூதரும் ஸத்வஸ்தராவார்கள் காண்" என்றான்' என்று. இதன் விளக்கம் : இராஜேந்திர சோழன் என்னும் ஊரிலே ஒர் அந்தணனின் மகன் பெளத்தருடன் பழகிய தாலே மதிகெட்டுத் தன் பூணு நூலை அறுத்தெறிந்தும் குடுமியைச் சிரைத்தொழித்தும் விரதங் கெட்டவனாய்த் திரிந்து கொண்டிருந்தான்: இப்படியிருக்கையில் ஒருநாள் அவ்வூருக்குக் கூரத்தாழ்வான் எழுந்தருளினார். அந்த அந்தண குமாரனுக்கு ஏதோ இதோபதேசம் செய்தருளி னரோ இல்லையோ தெரியாது; ஆழ்வான் அந்த ஊருக்கு எழுந்தருளினது மட்டிலுமே தெரியும். அவன் அப்போதே முன்போல பிராமண இலட்சணங்களுடன் வீடு வந்து சேர்ந்தான். அவனைக் கண்ட அவனுடைய திருத்தந்தை யார் பிள்ளாய்! கூரத்தாழ்வானோடு சந்திக்கப்பெற் றாயோ?" என்று கேட்க, அங்கிருந்த சிலர் இதைக் கேட்டு, உண்மையில் ஆழ்வானுடைய அருளாலேயே இவன் திருந்தினான் என்பதை அவர்கள் மாத்திரம் நன்கு அறிந்தவர்களாகையாலே இந்த மருமத்தை இவர் எங்ங்னே தெரிந்து கொண்டார் என வியந்து, நீர் இதை எப்படித் தெரிந்து கொண்டீர்?" என்று கேட்டனர். ஆழ்வானுடைய சந்நிதானத்தில் தாமசர்களும் சாதிவிகர் களாய்த் திருந்துவது வழக்கமன்றோ? நெடுநாளாகத் தாமசனாய்க் கெட்டுப்போன இவன் இன்று சாத்விக புத்தி உண்டாகித் திருந்தினன் என்றால் ஆழ்வானோடே இவன் சந்தித்திருக்க வேண்டுமென்று தோன்றிற்று" என்றாராம் அவனது திருத்தந்தையார். 77 செருவரைமுன னாசறுத்த சிலையன்றோ கைத்தலத்த தென்கின் றாளால், "பொருவரைமுன் போர்தொலைத்த பொன்னாழி மற்றொருகை' என்கின் றாளால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/203&oldid=920813" இலிருந்து மீள்விக்கப்பட்டது