பக்கம்:வைணவ உரைவளம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 1 79 "ஒருவரையும் கின்னொப்பா ரொப்பிலா என்னப்பா!' என்கின் றாளால், கருவரைபோல் கின்றானைக் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொலோ?2 (செருவரை-போர் வீரர்களை ஆசறுத்ததொலைத்த; சிலை - வில்; பொருவரை(சிறகுடன்) போர் செய்த மலைகள்; தொலைத்த-பங்கம் அடைவித்த: ஆழிசக்கரம்; ஒப்பார்-ஒத்தவர்கள்; கருவரைஅஞ்சன மலை: தாய்ப் பாசுரம் : திருக்கண்ணபுரத்து விஷயமான திரு மொழியில் ஒரு பாசுரம். சார்ங்கத்தைப்பற்றியும் திருவாழியைப்பற்றியும், எம்பெருமானது ஒப்பற்ற தன்மையையும் வாய்வெருவுகின்றாள் என் திருமகள். திருக்கண்ணபுரத்து அம்மானைக் காண நேர்ந்ததோ!' என்று திருத்தாயார் பேசுகின்றாள். ஐதிகம் : பண்டு திருக்கண்ணபுரத்து அரையரொருவர் விரோதிகளால் தாம் நோவு பட நேர்ந்த காலத்து செளரி ராஜன் திருமுன்பே சென்று செருவரைமுன் ஆசறுத்த சிலையன்றோ கைத்தலத்தது,' என்று தாளந்தட்டி விண்ணப்பம் செய்ய, பெருமாள் திருவுள்ளம் உவந்தருளி அரையரை நோக்கி, ஒய்! நீர் அஞ்ச வேண்டா; ஒருக் கணத்திலே விரோதிகளை முடிக்கிறோம்" என்று அருளிச் செய்து அப்படியே தலைக்கட்டினதாக ஓர் ஐதிகம் வியாக்கியானத்தில் காணப்படுகின்றது. 78 'கரையெடுத்த சுரிசங்கும்' (அவதாரிகை). இது மகள் பாசுரம். திருக்கண்ணபுரத் தெம்மானை சம்ஸ்லேஷித்து 2. பெ. ஒரு 5.1:: 3. பெரி. சி.டி. θεδ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/204&oldid=920814" இலிருந்து மீள்விக்கப்பட்டது