பக்கம்:வைணவ உரைவளம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

臀8本 வைணவ உரைவளம் தடவிக் கொண்ட பரம முக்தனுமான பெருமானுடைய குணத்தில் ஈடுபட்டு வளை இழந்தேன்' என்கின்றாள். தயிருண்ட வாய்துடைத்த மைந்தன் : இந்த இடத்தில் ஆழ்வானுடைய அதிமாதுஷஸ்தவ பூர் சூக்தி நினைக்கத் தக்கது. அதாவது, வெண்ணெயைக் களவு செய்த கண்ணன் உடையவர்கள் தன்னைப் பிடிக்க வருகின்ற சுவடறிந்து கையது வாயதான வெண்ணெயை மறைந்திட வேண்டுமென்றெண்ணி வாயிலேயாவது கையிலேயாவது வெண்ணெய் இருக்கக் கண்டாலன்றோ நம்முடைய களவு வெளிப்படும்? கையிலும் வாயிலும் இல்லாதபடியாக்கி விடுவோம்’ என்று வெண்ணெயை எல்லாம் உடம்பிலே தடவிக் கொண்டு இனி நாம் யாருக்கும் அஞ்ச வேண்டிய தில்லை என்று அச்சமின்றி வெளியே புறப்பட்டான் என்கிற ஒரு முக்த சேஷ்டிதத்தை அநுசந்தித்து, என் நாயனே, இப்படியும் ஒரு மடமையுண்டோ? வெண்ணெய்க் களவை மறைக்க நினைத்து அது நன்கு வெளிப்படும்ப4. யான காரியம் செய்தாயே! இஃது உண்மையில் மடமை யாலோ அன்றி மடமை அபிநயமா? சொல்லாய் பிரானே!" என்றார். பொருத்தமான ஓர் ஐதிகம் : முற்காலத்தில் ஒரு பையன் அரசன் தோட்டத்தில் புகுந்து மல்லிகை மொக்குகளைக் களவாடிக்கொண்டிருக்கையில் அஃதறிந்ததோட்டக்காரன் அவனைப் பிடித்து அரசவைக்குக் கொண்டு போக இருத்தான். இதனையுணர்ந்த அப் பையன் இந்த ஆபத்தில் நின்றும் எங்ங்னே தப்பிப் பிழைப்பது?’ என்று கவன்று கொண்டிருக்கையில் இச்செய்தியை அறிந்த அவன் தந்தை :வாயுண்டானால் பிள்ளை பிழைக்கிறான்" என்று அப்பையனின் செவியில் படுமாறு செய்விக்க, பாம்பின் கால் பாம்பறியும்' என்றாற்போல தந்தையின் சொற் கருத்தையுணர்ந்த அப் புதல்வன் அந்த மல்லிகை மொக்கு களை மென்று தின்று விட்டான். பிறகு வெறுங் கையனான அவனை என் சொல்லி அரச தண்டனைக்கு ஆளாக்குவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/209&oldid=920819" இலிருந்து மீள்விக்கப்பட்டது