பக்கம்:வைணவ உரைவளம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 185. தென்று திகைத்த தோட்டக்காரன் அவனை விட்டிட்டான் என்ற கதை உண்டு. தின்னக் கூடாதவற்றையும் வருந்தித் தின்று களவை மறைத்துக் கொள்ளும் பிள்ளைகளின் இயல்புதெரிந்திருந்தும் உண்டதயிரின் சுவட்டைநாவினால் நக்கி மறைத்துக் கொள்ளலாமாயிருக்க, அங்ங்னம் செய்யாமல் களவுநன்கு வெளிப்படுமாறு தயிர்ச்சுவடு முகம் எங்கும் தடவிக்கொண்டது பேதைமையின் பணியன்றோ?' என்று இத்திருக்குணத்தில் உள் குழைந்து வளை இழந்தாள் போலும் பரகால நாயகி. 81 மாரி மாக்கடல் வளைவணற் கிளையவன் வரைபுரை திருமார்பில் தாரி னாசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்ததோர் துணைகாணேன் ஊரும் துஞ்சிற்று; உலகமும் துயின்றது; ஒளியவன் விசும்பு இயங்கும் தேரும் போயிற்று; திசைகளும் மறைந்தன; செய்வது ஒன்று அறி. யேனே." (மாரி-மேகம்; வளைவணன்-சங்கு போன்ற வெண்ணிறமுடைய பலராமன்; தாழ்ந்ததுதாமதித்தது; விசும்பு-ஆகாயம்; ஒளியவன்சூரியன்; மறைந்தன -தெரியவில்லை! இப்பாசுரம் திருமங்கையாழ்வார் அருளிச் செய்தது. "தலைவனைப் பிரிந்த தலைவி மாலைப்பொழுது கண்டு இரங்குதல்' என்னும் அகத்துறையில் அமைந்தது. திருமங்கையாழ்வார்-பரகாலர்-நாயகி நிலையிலிருந்து பேசுகின்றார்: எம்பெருமான் திருமார்பிலனிந்துள்ள 10. பெரி. திரு. 8.5:2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/210&oldid=920821" இலிருந்து மீள்விக்கப்பட்டது