பக்கம்:வைணவ உரைவளம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 18? அளவில் முன்னே பிரம்ம ரதம் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு செல்பவர்கள் விரைந்து செல்லுகையாலே திருந்தேரி மறைய, அதற்குத் தகுதியாகப் பொன்னாச்சி யின் அநுசந்தானம், தேரும் போயிற்று; திசைகளும் மறைந்தன; செய்வதொன் றறியேனே. என்று முடிய, அப்போதே பொன்னாச்சியின் உயிரும் தன்னைடவே விட்டு நீங்கிப் போயிற்று. இந்த ஐதிகம் பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானத்தில் காணப் பெறுகின்றது. 82 ஏழு மராமரம் துளைபடச் சிலைவளைத் திலங்கையை மலங்குவித்த ஆழி யான், கமக் கருளிய அருளொடும் பகலெல்லை கழிகின்றதால் தோழி! நாமிதற் கென்செய்தும்! துணையில்லை சுடர்படு முதுநீரில் ஆழ ஆழ்கின்ற ஆவியை அடுவதோர் அக்திவந் தடைகின்றதே!' (ஏழு மராமரம்-ஏழு மராமரம்; சிலை-வில்: மலங்குவித்த-கலங்கப் பண்ணின; சுடர்சூரியன்; படு-தான்தோன்றின; முதுநீர்கடல்; ஆழ-மறைந்து போக; அடுவதுமுடிப்பதன; மகள் பாசுரம் : :எம்பெருமான் அருளும் போயிற்று; பகற்பொழுதும் போயிற்று; உயிரை முடிப்பதாகவுள்ள மாலை வந்து சேர்ந்து விட்டதே' என்று பொழுது கண்டு இரங்குகின்றாள் பரகாலநாயகி. 11. பெரி, திரு. 8,595

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/212&oldid=920823" இலிருந்து மீள்விக்கப்பட்டது