பக்கம்:வைணவ உரைவளம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 வைணவ உரைவளம் ஏழு மராமரம் துளை படச் சிலை வளைத்து : இதிலுள்ள இதிகாசம்: இராமன் வாலிக்கு அபயம் அளித்த பின்னரும் சுக்கிரீவன் மனம் தெளியாமல் வாலியின் பேராற்றலைப் பற்றிப் பலவாறு சொல்லி, வாலி மராமரங்களைத்து துளைத்ததையும், துந்துபியின் உடல் எலும்பை ஒரு யோசனை தூரம் தூக்கியெறிந்ததையும் குறித்துப் பாராட்டிக் கூறி, இவ்வாறு பேராற்றல் அமைந்தவனை வெல்வதுகூடுமா? என்றுசொல்ல, அது கேட்ட இலக்குவன், *உனக்கு நம்பிக்கை இல்லையாயின் இப்போது செய்ய வேண்டுவது என்ன?’ என்று கேட்க, அதற்குச் சுக்கிரீவன், 'இராமபிரான் நீறு பூத்த நெருப்பு போலத் தோன்றினும், வாலியின் வல்லமையை நினைக்கும்போது ஐயம் உண்டா கின்றது; ஏழு மராமரங்களையும் துளைத்து இந்தத் துந்துபி யின் எலும்பையும் இரு நூறு விரற்கடை தூரம் தூக்கி எறிந்தால் எனக்கு நம்பிக்கை உண்டாகும் என்று சொல்ல, சுக்கிரீவனுக்கு நம்பிக்கை உண்டாகுமாறு அவனது வார்த்தைக்கு இயைந்து இராமபிரான் துந்துபியின் உடலெலும்புக் குவியலைத் தனது காற்கடை விரவினால் இலேசாய்த் தூக்கிப் பத்து யோசனைத் தூரத்திற்குஅப்பால் எறிய, அதனைக் கண்ட சுக்கிரீவன் முன்பு உலரா திருக்கையில் வாலி இதனைத் தூக்கியெறிந்தான்; இப் போது உலர்ந்து போன இதனைத் தூக்கியெறிதல் ஒரு சிறப்பன்று என்று கூற, பின்பு இராமன் ஒரம்பை ஏழு மராமரங்களின்மேல் ஏவ, அஃது அம்மரங்களைத் துளைத்த தோடு ஏழுலகங்களையும் துளைத்துச் சென்று மீண்டு இராமனது அம்பறாத் துாணியை அடைந்தது என்பது வரலாறு. 83 பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப் பொன்ற அன்று புள்ளுர்ந்து பெருந்தோள் மாலி தலைபுரளப் யேர்ந்த அரக்கர் தென்னிலங்கை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/213&oldid=920824" இலிருந்து மீள்விக்கப்பட்டது